உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்த வண்டி தான் டில்லி செல்லும்: அண்ணாமலை பேச்சு

இந்த வண்டி தான் டில்லி செல்லும்: அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''மற்ற கட்சிகள் எத்தனையோ வண்டியில் பிரசாம் செய்ய வரலாம்; ஆனால் நான் வந்திருக்கும் இந்த வண்டி தான் டில்லி போகின்ற வண்டி'' என கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.கோவை லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்காக கோவை வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பி.என்.புதூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டபோது அண்ணாமலை பேசியதாவது: இந்த சரித்திர தேர்தலில் பிரதமர் மோடியை 3வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர செய்ய வேண்டும். இதுவே 10 ஆண்டுகளாக அவரின் உழைப்பிற்கு நாம் அளிக்கப்போகும் ஊதியம். உங்கள் வீட்டு பிள்ளையான இந்த அண்ணாமலைக்கு ஏப்.,19ல் நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன். மற்ற கட்சிகள் எத்தனையோ வண்டியில் பிரசாரம் செய்ய வரலாம்; ஆனால் நான் வந்திருக்கும் இந்த ஒரு வண்டிதான் டில்லி போகின்ற வண்டி. மற்றவைகள் எல்லாம் எங்கே போவது என யோசித்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Arachi
ஏப் 01, 2024 15:33

இவர் இன்னும் தமிழ் நாட்டின் யாதர்த்தம் தெரியாமல் தமிழ் நாட்டை நம்பிக்கொண்டிருக்கிறார் தமிழ் நாட்டில் இருந்து எந்த அரசியல் வாதி பேசினாலும் அதிலும் அண்ணாமலை என்னும் அரசியல் கோமாளி பேசினாலும் கூட்டம் சேரும்


beindian
ஏப் 01, 2024 15:06

இந்த காமெடி பீஸை வைத்துக்கொண்டு தாமரை வளர்கிறது என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது


Kirubakaran Palanisamy
ஏப் 01, 2024 14:57

நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையை


கனோஜ் ஆங்ரே
ஏப் 01, 2024 14:52

குறுக்கால மறுக்கால போய்கிட்டு வந்துகிட்டு? அதுதான் விரட்டிவிடப் போறாங்கல்ல?


raja
ஏப் 01, 2024 14:30

தமிழர்களே பாராளுமன்ற கேன்டீன் டோகென்ன தேர்ந்தெடுத்து அனுப்ப போறீங்களா இல்லை எம் பி ஆக இல்லாத பொழுதே தமிழர்களுக்கு மூன்று மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கும் பிஜேபி வேட்பாளர்களை தேந்தெடுத்து மந்திரி பதவிகளை பெற்று தமிழர்களுக்கு நன்மை செய்பவர்களை அனுப்ப போகிறீர்களா சிந்தியுங்கள்


கனோஜ் ஆங்ரே
ஏப் 01, 2024 16:26

அதே நான் திருப்பி கேக்குறேன் தமிழர்களே, சிந்தியுங்கள் சுடுசோறு திங்கும் தமிழ்நாட்டு சிங்கங்களே


keerthanadmr
ஏப் 01, 2024 14:22

Well done speech


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை