உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது பங்காளி கூட்டணியல்ல; மாமன் - மச்சான் கூட்டணி: உறவுக்கு அழைக்கிறார் அண்ணாமலை

இது பங்காளி கூட்டணியல்ல; மாமன் - மச்சான் கூட்டணி: உறவுக்கு அழைக்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எங்கள் கூட்டணி பங்காளி கூட்டணி அல்ல, மாமன் - மச்சான் கூட்டணி. எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: மக்கள் எல்லோரும் எங்களை விரும்புகின்றனர்; பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என நினைக்கின்றனர். எந்த பங்காளியுடனும் போகப்போவதில்லை. 2024ல் பா.ஜ.,வின் கூட்டணி மக்கள் முன்பு அற்புதமாக நிற்கின்றது. கூட்டாட்சி என சொல்லியாச்சு; பங்காளி என சொல்வதை விட எங்கள் கூட்டணி மாமன் - மச்சான் கூட்டணி. பங்காளிகள் வேண்டாம். அக்கா, தங்கை, மாமன், மச்சான் என எல்லோரும் இணைந்து தமிழகத்தை வளப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கின்றது. மாமன் - மச்சான் கூட்டணி என்றால் வேற்றுமையில் ஒற்றுமை. அதில் ஜாதி, மதம், இனம் கிடையாது. அதுவே பங்காளி என்றால் ஒரே இனம். எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம். 2026 தேர்தலில் அரசியல் களத்தை இந்த மாமன் - மச்சான் என்ற வார்த்தை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதிக்கு மரியாதை ஏன்?

''திமுக.,வை அழிப்பேன் என்றும், கருணாநிதியை பற்றி விமர்சித்தும் பேசிய அண்ணாமலை, அவரது நினைவிடம் சென்று கும்பிட்டு சென்றுள்ளார்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்திருந்தார். அது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை கூறிய பதில்: ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. சித்தாந்த ரீதியாக திமுக, பாஜ.,வுக்கு வித்தியாசங்கள் இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்த பணிகளுக்காக விவசாயியின் மகனாக கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிடு போட்டதை பெருமையாகத்தான் பார்க்கிறேன். வாஜ்பாய் உடனும் அவர்கள் கூட்டணி அமைத்திருந்தனர். பா.ஜ., பற்றி தவறான பிரசாரம் தமிழகத்தில் பரப்பப்படுவதாக அப்போது கருணாநிதி கூறியிருந்தார். என் வயதைவிட அவருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. எத்தனை இடங்களில் கருத்து வேறுபாடுகளை நான் வெளிப்படுத்தினாலும், அவரது 100வது ஆண்டில் அவருக்கு மரியாதை செய்வதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்.

முதுகெலும்பு வளையாமல்

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவிடமும் சென்றுள்ளேன். அதேபோல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடமும் செல்வேன். தமிழகத்திற்காக பணியாற்றியவர்களை பார்க்கக்கூடாது என சொல்வது தவறு. நான் யார் காலிலும் விழவில்லை; கூனிகுருகி நிற்கவில்லை; மூன்றடி தள்ளி நிற்கவில்லை. கம்பீரமாக நிமிர்ந்து சென்று, முதுகெலும்பு வளையாமல் சென்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வந்துள்ளேன்; அதற்காக பெருமைப்படுகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Arachi
ஆக 21, 2024 16:06

சமுதாய சீர்திருத்தம் செய்தவர் குறிப்பாக மனிதனை மனிதன் இழுத்து சென்ற கை ரிக்ஷாவை ஒழித்தவர் கலைஞர். இந்த அவலத்தை கண்ணால் பார்த்திருக்கிறேன் அதுவும் காலணிகூட இல்லாமல் இழுத்து செல்வதை. அண்ணாமலைக்கு இப்போதுதான் விவரம் கொஞ்சம் வந்திருக்கு. மதத்தின் பேரால் இருக்கும் எந்த கட்சியும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொருத்தமற்றது. மதம் வேண்டும் ஆனால் மதத்திற்கு மதம் பிடிக்கக் கூடாது.


Pattan
ஆக 21, 2024 15:49

வாழ்க கூட்டணி, 200₹க்கு கருத்து சொன்ன தொண்டர்கள் பாவம்,


Ravi Kulasekaran
ஆக 21, 2024 10:11

நிச்சயமாக நடக்கும் மோடியின் நல்லா ஆட்சி திராவிட மாடல் அல்ல வளர்ச்சி அடைகின்ற உ பி மாநில மாடல் மோடி ஆட்சி தமிழ் நாட்டில் மாமன் மச்சான்கள் உதவியுடன் ஜாதி வேற்றுமை இல்லாமல் குடும்ப ஆட்சியை ஒழித்து ஏன் ஒரு தலித் முதல்வர் கூட வராதாம்


INDIAN
ஆக 21, 2024 09:51

என்னாப்பா இது. இந்த ஆளு ஒவ்வொரு நாளைக்கு ஒரு மாதிரி புலம்பி கொண்டு அலைகிறார். என்னத்த குட்டிகரணம் போட்டாலும் தமிழனிடம் ஒன்றும் நடக்காது. ஒரு வார்டு உறுப்பினர் பதவியை கூட மக்கள தர தயாராக இல்லை. ஆனால் பில்டப் மாத்திரம் ஜாஸ்தி.


Karuthu kirukkan
ஆக 21, 2024 09:13

நாரம்பில்லா நாக்கு நான்கு பக்கமும் சுழலும் , வாழட்டும் வாடகை வாய்கள் ..தீதும் நன்றும் பிறர் தர வாரா


Shyam Venkat
ஆக 21, 2024 09:11

பொறுமை மிக முக்கியம் நாங்கள் அண்ணாமலையை முதல்வர் ஆக்குவோம்


V GOPALAN
ஆக 21, 2024 06:49

Now tamilnadu has got another Durai Vaiko. Stalin will give MLA seat in Trichy under DMK Flag . Annamalai will oversea Pen Memory in Marina Beach. All the best


Yasararafath
ஆக 20, 2024 22:31

அண்ணாமலை நினைப்பது ஒரு காலமும் நடக்காது. தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இடம் இல்லை.


naadodi
ஆக 21, 2024 02:51

. பொறுமையாய் இருந்து பாரு.


Saravanan Ganapathy
ஆக 20, 2024 22:23

அஇஅதிமுக இருக்குதா இல்லை கொங்கு கட்சியாக மாறிடுச்சா


Saravana Doreswamy
ஆக 22, 2024 12:50

வாஷ் உட் பார்ட்டி பிரேம் தமிழ்நாடு அண்ட் PEOPLE.


Saravana Doreswamy
ஆக 22, 2024 12:51

ADMK WASHOUT FROM TAMILNADU AND FROM THE PEOPLE OF TAMILNADU


Mukundan Arasanipalai Sadagopachari
ஆக 20, 2024 21:23

வாட் அண்ணாமலை சைட் ஐஸ் நொதிங் வ்ரோங். This should not be made big issue.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ