உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் அதிருப்தி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது பணியில் இருந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரின் சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 2018ல் ஆண்டு மூடப்பட்டது. அந்த ஆண்டு மே 22ல், ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில், 13 பேர் இறந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rbdt4lzi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கப்பட்ட வழக்கு, அதே ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இன்று (ஜூலை 29) நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: துப்பாக்கிச் சூடு நடப்பதைக் கண்டு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதை ஏற்க முடியாது. இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோரின் சொத்து விவர அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை நியாயமான முறையில் நடைபெறுவதோடு, அரசு செயலாளர் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

shyamnats
ஜூலை 30, 2024 11:03

சமூக விரோதிகள் ஸ்டெரிலைட் ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தியதையும் காவல் துறை வாகனங்கள் கூட சேதப்படுத்தப்பட்ட போதும் சட்டம் ஒழுங்கு என்னவானது? இந்த வன்முறை போக்கை தூண்டியவர்களையும் முறையாக கண்டுபிடித்தார்களா, விசாரித்தார்களா இவர்கள் சொல்லிய கான்சர் பற்றிய விவரங்களையாவது ஆதாரங்களோடு கூறி நிரூபித்தார்களா. ஆலையை மூடுவதில்தான் அனைத்து அரசியல் வா திகளும் ஆர்வம் காட்டினார்கள்.


C.SRIRAM
ஜூலை 29, 2024 22:16

போராட்டக்கார்கள் போர்வையில் சமூக விரோதிகள் ஸ்டெரிலைட் ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து கார்கள் மற்றும் பிற சொத்துக்களை சேதப்படுத்தியதை ஜீரணிக்கமுடியுமா ?. வர வர தீர்ப்புகள் தரம் கேள்விக்குரியதாகிவருகிறது


R Kay
ஜூலை 29, 2024 21:16

முதலில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தீர்த்து வையுங்கள். பின்னர் அரசின் நடவடிக்கைகளில் மூக்கை நுழைக்கலாம்.


bal
ஜூலை 29, 2024 21:02

அந்த கலவரத்தை தூந்டினவங்க தான் இப்போது மக்கள் ஆட்சியில் வைத்துள்ளனர். கனி அக்கா என்ன பண்ணினாங்க தூத்துக்குடிக்கு. நிறைய மக்கள் மதம் மாற உதவினாங்க ஒரு கூட்டம்


R Kay
ஜூலை 29, 2024 20:55

இப்படியே இன்னும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் உருட்டுங்கள். நீதித்துறையின் வேகம் பிரமிப்பூட்டுகிறது.


Iniyan
ஜூலை 29, 2024 20:55

நாசமாய் போன நீதி பதிகளுக்கு ஒரு பாட்டில் ஜீரக தண்ணீர் ப்ளீஸ்


aaruthirumalai
ஜூலை 29, 2024 20:42

ஜீரணமாகவில்லை என்றால் டைஜின் சிரப் சாப்டுங்க எசமா


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 19:01

அப்பாவிகளை சுட்டால் அரசுக்கு என்ன லாபம்?. வாக்கு வங்கிதான் நாசமாகும். எடப்பாடி அவர்களுக்கு இது நன்கு தெரிந்திருக்கும். அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்ட உடனே ஊரடங்கு உத்தரவு போட்டு கைக்கூலிகளாக போராட்டம் செய்தவர்களின் மீது குண்டாஸ் போட்டிருக்க வேண்டும்.


Sree
ஜூலை 29, 2024 18:52

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் அதிருப்தி எங்களால் கூட ஜீரணிக்க முடியவில்லை குற்றவாளி என உறுதி செய்து சிறைக்கு செல்லும் அமைச்சரை தண்டனை நிறுத்தி வைத்து மீண்டும் அமைச்சர் ஆக்கிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்து பாதுகாத்தது


Anand
ஜூலை 29, 2024 18:51

அப்படியானால் ஓமத்திரம் சாப்பிடவேண்டும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ