உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக.,வை அழிக்க நினைப்பவர்கள் கரைந்து போய் விடுவர்: இ.பி.எஸ்., பதிலடி

அதிமுக.,வை அழிக்க நினைப்பவர்கள் கரைந்து போய் விடுவர்: இ.பி.எஸ்., பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலூர்: ‛‛ அ.தி.மு.க.,வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்பது வரலாறு '' என அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.அரியலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., காணாமல் போகும் என்று சிலர் பேசுகின்றனர். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் தான் இப்படி பேசுகின்றனர்.அ.தி.மு.க.,வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்பது தான் வரலாறு. அ.தி.முக.,வை யாரும் மிரட்ட முடியாது. எந்த பூச்சாண்டிக்கும் அ.தி.மு.க., பயப்படாது. எனவே, பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்; அ.தி.மு.க.,வை சீண்டிப் பார்த்தால், எதிர்வினை எப்படி இருக்கும் என்று தொண்டர்கள் பாடம் கற்றுக் கொடுப்பர். உழைப்பை நம்பி இருக்கும் கட்சி அ.தி.மு.க., தொண்டர்களால் ஆளப்படும் கட்சி அ.தி.மு.க.,ஆட்சிக்கு வருவதற்கு முன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என ஸ்டாலின் கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் தகுதி வாய்ந்தோருக்கு மட்டும் என்கிறார். 70 லட்சம் மகளிருக்கு மட்டும் தான் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் 1.1.5 கோடி பேருக்கு வழங்கப்படுவதாக கூறுகின்றனர். அ.தி.மு.க., தொடர்ந்து 27 மாதங்கள் போராடியதால் தான், தி.மு.க., அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை தந்தது.அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம் என்றனர். ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட பஸ்களில் மட்டும் இலவச பயணம் என்றனர். மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்.ஸ்டாலினுக்கு எப்போதும் அவரது குடும்பத்தை பற்றி தான் சிந்தனை. எப்போதும் குடும்பத்தை பற்றி சிந்திக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் இண்டியா கூட்டணியை ஏற்படுத்தி ஓட்டுக் கேட்கிறார். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sck
ஏப் 14, 2024 07:16

இப்படி பேசி சொந்த காசுல தனக்கே சூனியம் வச்சிக்கிறியே பாஸ்.


Bhakt
ஏப் 14, 2024 03:24

தோடா இவ்விரு கண்ணகன் இவர் சாபம் வுட்டா பளிச்சிடும்


surya krishna
ஏப் 14, 2024 01:51

அதிமுக வழிக்கு வேற யாரும் தேவையில்லை நீங்க ஒரு ஆள் போதும் எல்லாம் சோலி முடிஞ்சு போகும். கட்சி உங்க கட்டுப்பாட்டில் வந்து பிறகு உங்களோட தவறான கூட்டணிகள் கட்சியை அழித்தி தீர்த்துவிடும்.


surya krishna
ஏப் 14, 2024 01:51

அதிமுக வழிக்கு வேற யாரும் தேவையில்லை நீங்க ஒரு ஆள் போதும் எல்லாம் சோலி முடிஞ்சு போகும். கட்சி உங்க கட்டுப்பாட்டில் வந்து பிறகு உங்களோட தவறான கூட்டணிகள் கட்சியை அழித்தி தீர்த்துவிடும்.


Balasubramanyan
ஏப் 13, 2024 21:55

Owasso supports AIADMKAIADMK CAN CHANGE ITS NAME TO ANY MUSLIM LEAGUE ALREADY POPULAR FRONT OF INDIA IS CONTESTING WITH THE HELP OF AIADMK SO IT DOES NOT NEED HINDU VOTES AND CHRISTAN VOTES SHAME ONEPS TO SEGREGATE THE MGR AND JAYALALITHA LOYALISTS FROM THE PARTY IVOTED FOR AIADMK ALWAYS IN ALL ELECTIONS NOW NO TO EPSMY SINGE VOTE THEY NEVER BOTHER BUT LIKE TJIS IF ALL THINKS THE MPS IF ELECTED WHAT THEY CAN DOAT PARLIMENTNOTHING


Tamil Selvan
ஏப் 13, 2024 20:31

அ தி மு க வை அழிப்பதற்கு எடப்பாடி ஒருவரே போதும்


Ramesh Sargam
ஏப் 13, 2024 20:23

இவரும் அந்த ஓ பன்னீர்செல்வமும் சேர்ந்து அதிமுகவை அழித்துவிட்டு, அழிக்க நினைப்பவர்கள் கரைந்து போய்விடுவர் என்று உளறுகிறார் வெய்யில் முத்திப்போச்சு


Bala
ஏப் 13, 2024 20:21

திரு அண்ணாமலை அவர்கள் சொன்னது அதிமுகவும் திமுகவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கரைந்து விடும் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கிறார் பங்காளி கட்சிகள் என்று அவர்களே சொன்னதாயிற்றே பிறகு இல் களம் பிஜேபி கூட்டணி VS DMK ADMK என்று மாறிவிடும்


Rathinakumar KN
ஏப் 13, 2024 19:39

அதிமுகவை நாங்களே அழித்து கொள்வோம் உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்


S. Gopalakrishnan
ஏப் 13, 2024 19:25

அ. தி. மு. க. ஏதோ வெல்ல முடியாத சக்தி என்று நினைத்து கொண்டு சொப்பனத்தில் சண்டை போடுகிறார். இல்லாத எதிரியுடன் ஷாடோ பாக்ஸிங் செய்கிறார் !


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை