உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.மா.கா., யாருடன் கூட்டணி? பிப்., 12 பொதுக்குழுவில் முடிவு

த.மா.கா., யாருடன் கூட்டணி? பிப்., 12 பொதுக்குழுவில் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட 12 துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை, கட்சியின் தலைவர்வாசனுக்கு வழங்கிதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tihzhn6p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில் பேசிய வாசன், ''த.மா.கா., நிறுவனர் மூப்பனாரின் வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், லோக்சபா தேர்தலில் த.மா.கா., முடிவெடுக்கும். தி.மு.க., -- காங்.,கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும்,'' என்றார்.பின்னர் வாசன் அளித்த பேட்டி:த.மா.கா., பொதுக்குழு எழும்பூரில் பிப்ரவரி 12ம் தேதி கூடுகிறது. அதில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். பா.ஜ., -அ.தி.மு.க., தலைவர்களை நான் சந்திப்பது புதிதல்ல. அடிக்கடிசந்திக்கிறேன். அப்படிதான் நட்டாவையும் பழனிசாமியையும் சந்தித்தேன். இவ்வாறு வாசன் கூறினார்.

உயிரூட்ட துாது போகிறாரா?

'இண்டியா கூட்டணி உடைந்துவிட்ட சூழலில், அ.தி.மு.க., -- பா.ஜ., -- பா.ம.க., - தே.மு.தி.க., -- ஓ.பி.எஸ்., -- தினகரன் -- புதிய தமிழகம் கூட்டணி அமைந்தால், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியும் என, வாசன் நினைக்கிறார். இதற்காகவே நட்டாவையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சந்தித்தார். பிப்., 12க்குள் நல்லது நடக்கும் என நம்புகிறார்' என, வாசன்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Krishnamurthy Venkatesan
பிப் 10, 2024 21:43

அதிமுகவுடன் பாஜக இப்போது கூட்டணி வைத்தால் அந்த கூட்டணிக்கு என் ஒட்டு கிடையாது.


K.Ramakrishnan
பிப் 04, 2024 23:38

இவரு கிட்ட கூட்டணி சேர்ந்தால்... அப்படியே அறுத்து தள்ளிடுவாரு... அவ்வளவு ஓட்டுகளை வைச்சிருக்காரு... தனியா நின்னா ஒரு கவுன்சிலர் ஆக கூட முடியாது.


kulandai kannan
பிப் 04, 2024 17:03

வாரிசு, ஜமீன்தாரிய ஒரு நபர் கட்சி.


P.Sekaran
பிப் 04, 2024 12:09

அண்ணாமலையை பழனிசாமி எதிர்க்கிறார். பாஜக தமிழ்நாட்டில் வேறூண்றி விடுமோ என்று அச்சப்பட்டு கூட்டணி வைக்க தயங்குகிறார். பழனிசாமியை தனித்து போட்டியிட வைக்க வேண்டும் மீதியுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நின்று மத்தியில் வரும் மோடிக்கு ஆதரவு தெரிவித்தால் தமிழக மக்களுக்கு வேண்டியதை பெற்று தமிழ்நாடு முன்னேறும். இரண்டு கட்சிகளும் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை. ஆதலால் தேர்தலில் இதை சொல்லியே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் வென்று விடும் இது தின்னம்.


PRAKASH.P
பிப் 04, 2024 11:59

Unknown party. Best to merge with bjp


Radhakrishnan Seetharaman
பிப் 04, 2024 11:57

ஒட்டு மொத்த கட்சியையும் ஒரே போட்டோவில் பார்ப்பது மிகவும் அரிது ????


kulandai kannan
பிப் 04, 2024 17:03

செம.


raja
பிப் 04, 2024 22:39

Super


N.Chinnachamy
பிப் 04, 2024 11:56

இவருடைய பலத்திற்கு தா.ம.க குறைந்தது 21 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது . துணை பிரதமர் ஆவார் பாருங்கள்


Radhakrishnan Seetharaman
பிப் 04, 2024 11:56

எடப்பாடிக்கு கட்சியை விட தன்னுடைய எதிர்காலம் தான் முக்கியம். கொங்கு மண்டலத்தைத் தாண்டி அவருக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது. இப்போது அங்கேயும் அண்ணாமலை நுழைந்து விட்டார். அதனால் 2026க்குள் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பாரே தவிர யாருடனும் சமரசம் செய்ய மாட்டார். அது வரை திமுகவையும் பெரிய அளவில் எதிர்க்க மாட்டார். அதிமுக தொண்டர்களுக்கு ரோஷம் வந்து எதிர்ப்பு வலுத்தாலொழிய இதற்கு முடிவு கிடைக்காது.


தமிழ்
பிப் 04, 2024 11:54

இந்தக்கட்சிக்கு பொதுக்குழு என்று ஒன்று உள்ளதா.


g.s,rajan
பிப் 04, 2024 10:03

நமது நாட்டில் இவருடைய கூட்டணிக்காக பலர் காலம் காலமாக தவம் கிடக்கின்றனர், சும்மா அடிச்சு விடுவோமே ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை