உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஜன.10 வரை மிதமான மழை தொடரும்!

தமிழகத்தில் ஜன.10 வரை மிதமான மழை தொடரும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்றும்(ஜன.,04), நாளையும்(ஜன.,05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வரும் ஜன. 6ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் ஜன. 7ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வெகுளி
ஜன 04, 2024 18:48

மிதமான மழைக்கு எத்தனை கோடி நிதியுதவி கேக்கலாம்?


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 13:59

என்னாது மீண்டும் மீண்டுமா ? அடேய் மழை வர்றது கூட பிரச்னை இல்ல., சமாளிக்கலாம். ஆனால் அதை வச்சி, உதவின்ற பெயரில் ஊரை ஏமாத்துற இந்த party-யினர் செய்யுற அரைகுறை அரசியல் வேற பாக்கணுமேன்னு தான் பக்குன்னு இருக்கு.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி