உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்

சென்னை: தமிழக காவல்துறையில் தேர்தல் விதிகளின் படி காவலர்துறையினர் இடமாற்றம் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களில் துவங்கியது. தேர்தல் நடத்தை விதிகளின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் சொந்தஊரில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி துவக்கப்பட்ட நவடிக்கையின் படி சென்னை காவல் துறையில் இருந்து மட்டும் 340 பேர் பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைமைகாவலர்கள், முதல்நிலை காவலர்கள், இரண்டாம்நிலை காவலர்கள் பெண்காவலர்கள் என மொத்தம் 1847 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Karthikeyan K Y
ஜன 05, 2024 13:05

சரியாக கப்பம் கட்ட வில்லையோ ? அல்லது சரியாக நேர்மையாக வேலை பார்த்தார்களா ? தமிழ்நாட்டில் ரோட்டில் போவதற்க்கே பயமாக இருக்கிறது எங்கே எப்போது என்ன கப்பம் கட்ட வேண்டுமோ என்று ?


Mani . V
ஜன 05, 2024 04:52

அரசு இதை மட்டும்தான் செய்து கொண்டே இருக்கிறது. நாடும், நாட்டு மக்களும் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை.


Ramesh Sargam
ஜன 05, 2024 00:39

இப்படி அடிக்கடி மாற்றம் கிடைக்கப்பெறுவதால், அவர்களின் பணித்திறன் குறையும் என்று கருதுகிறேன். இருந்தாலும் ஒரே இடத்தில் அவர்கள் பணிசெய்யக்கூடாது.


Raa
ஜன 05, 2024 00:21

புதிய ரௌடிகளை பார்க்கலாம்... புதிய மாமூல் பிக்ஸ் பண்ணிக்கலாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை