உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  8,000 பேருக்கு ஓட்டுரிமை பாதிப்பு திருநங்கையர் புகார்

 8,000 பேருக்கு ஓட்டுரிமை பாதிப்பு திருநங்கையர் புகார்

சென்னை: எஸ்.ஆர்.ஐ., காரணமாக திருநங்கையரின் 8,000 ஓட்டுக்கள் பறி போகும் அபாயம் உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிடப்பட்டு உள்ளது . திருநங்கையர் நல வாரிய உறுப்பினர் அனுஸ்ரீ, சென்னையில் நேற்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளித்தார். பின், அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர்., படிவத்தில், 2003ம் ஆண்டு பெற்றோர் இருப்பிட சான்றிதழ் வழங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. திருநங்கையர் பலரும், 18 வயது ஆனவுடன் வீட்டை விட்டு வெளியேறி விடுவோம். எனவே, 2003ம் ஆண்டு பல திருநங்கையரின் பெயர்களை, அவர்களது குடும்பத்தினர் நீக்கி விட்டனர். பெற்றோர் இருப்பிட சான்று கிடைக்காது என்பதால், 8,000 திருநங்கையருக்கு ஓட்டுரிமை பறிபோய் விடும். எனவே, மாற்று ஏற்பாடு செய்யுமாறு மனு அளித்துள்ளோம் . இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ