தூத்துக்குடிசம்பவம்: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மீது நடவடிக்கை:தமிழக அரசு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கை மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்த விபரங்களை அரசு வெளியிட்டு உள்ளது .அருணா ஜெகதீசன் அறிக்கையின்மீது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l3w3lxgp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூடுதல் நிதி
உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுடன் தலா ரூ.5 லட்சம் கூடுதலாக நிதி வழங்கப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு காவலர்களால் கைது செய்யப்பட்ட 93 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் என 93 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. பாளை சிறையில் இறந்த பரத்ராஜின் தயாருக்கு ரூ.5லட்சம் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மீது நடவடிக்கை
இறுதி அறிக்கையின் பரிந்துரையின் படி தூத்துக்குடி கலெக்டர் மற்றும் 3 வருவாய்துறை அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தில் கைதாகி வழக்கு பதியப்பட்ட 38 பேரின் உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் வழக்குகள் திரும்ப பெற்று தடையில்லா சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை
அருணாஜெகதீசன் விசாரணையின் பரிந்துரையின் அடிப்படையில் 17 காவல் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.சைலேஷ்குமார், கபில் குமார், சரத்கர், ஆகியோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.ஒரு உதவி ஆய்வாளர் ,இரண்டு இரண்டாம் நிலை ஒரு முதல்நிலை காவலர் மற்றும் காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.