உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்ரீரங்கம் கோவிலில் கட்டண கொள்ளை; வி.எச்.பி., கண்டனம்

 ஸ்ரீரங்கம் கோவிலில் கட்டண கொள்ளை; வி.எச்.பி., கண்டனம்

மதுரை: ''திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களிடம் கட்டண கொள்ளை நடத்த தி.மு.க., அரசு முயற்சி செய்கிறது,'' என, மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலர் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற மறுத்த திராவிட மாடல் அரசு, தொடர்ந்து ஹிந்து விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தரிசிப்பர். இதை பயன்படுத்தி, பக்தர்களிடம் கட்டண கொள்ளை நடத்த தி.மு.க., அரசு முயற்சி செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று கட்டணமாக, 4,000 மற்றும் 700 ரூபாய் சிறப்பு தரிசனம் ஏற்பாடு என்ற பெயரில், கட்டணம் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு கோவில்களில் மறைமுகமாக தரிசன கட்டணங்களை உயர்த்தி, பக்தர்களிடம் வசூல் நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவிற்கு வழிபட சென்ற, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிமை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மதச்சார்பின்மை எனக்கூறி, தி.மு.க., அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை மனதில் வைத்து செயல்படுவது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி