உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை சிறை காவலர்களால் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்?

கோவை சிறை காவலர்களால் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிறை காவலர்களால் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கூறியுள்ளார்.போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பற்றி தரக்குறைவாக பேசி, அவதுாறு பரப்பியதால், பிரபல, ' யு டியூபர்' சவுக்கு சங்கர் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.'நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது' என, அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அதை மறுத்துள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், 'சிறையில் அவரை யாரும் தாக்கவில்லை' என்று கூறியுள்ளார்.

சென்னையிலும் வழக்கு

இதனிடையே, பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது ஐபிசி 294(பி) ,354(டி), 506(ஐ), 509 மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்சியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சேலத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்டனம்

இதற்கிடையில், 'கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என, நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:பத்திரிகை சுதந்திரம் என, மூச்சுக்கு முந்நுாறு தடவை வாய்சவடால் விடும் தி.மு.க., அரசில், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல தி.மு.க.,வினர் மீது, அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும், நீதியும், அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பதை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று, நீதிபதி ஒருவர் வழியாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

சவுக்கு சங்கர் தேனியில் தங்கியிருந்த விடுதியில், அவரது உதவியாளர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த ராஜரத்தினம், 42, கார் டிரைவர் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராம்பிரபு, 28 ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் கஞ்சா வழக்கில், தேனி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சவுக்கு சங்கர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், தேனி போலீசார் அவ்வழக்கில், சவுக்கு சங்கரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venkatakrishna
மே 08, 2024 19:16

இதைப்பற்றி பேசுவது சரியாக இருக்குமா பிறகு கஞ்சா கேஸ் தான்


RAVINDIRAN B
மே 08, 2024 17:02

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வக்கீல் பத்திரிகை நிருபர் இவர்கள் என்ன வேண்டுமானலும் பேசுவார்கள் ஜனநாயக போர்வையில் யாரும் இல்லாத சவலை குழந்தை நிலை தான் சிறைத் துறையின் நிலை


ஆரூர் ரங்
மே 08, 2024 11:47

பங்காளிக்கட்சிக்கு ஆதரவாக பேசுபவர்களை பெயருக்கு அரெஸ்ட் பண்ணுவார்கள். பின்னர்(பேட்டரியுடன் மாதிரி) விடுதலை செய்து விருந்தளிப்பார்கள்.


தத்வமசி
மே 08, 2024 11:38

உலகின் தலைச்சிறந்த இன்டர்போல் நிறுவனத்துடன் பேசப்பட்டு வந்த தமிழக காவல்துறை, பாவம் இப்படி ஏவல் வேலை செய்வது காலத்தின் கோலம் ஆயிரம் வழக்குகள் இருக்க, இவரை கொண்டு வந்து அவர் பின் பல காவலர்களின் நேரத்தை, திறமையை வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம் ? சொல்பவர் சொல்லி விட்டு போகட்டுமே இவர்கள் சொல்லாததா? பேசாததா ? செய்யாததா ? இவர்கள் எதிர் கட்சியாக இருக்கும் போது இவர்கள் பேசும் பேச்சுக்கு இப்படித்தான் இவர்களை நடத்து கின்றனரா ?


MADHAVAN
மே 08, 2024 11:20

செரினா கேசும் இதும் ஒன்றா? இவன் மீடியாவில் பெண்களை பற்றி தவறாக பேசுவது குற்றமில்லையா? கருத்து சுதந்திரம் என்பது இந்த மூடருக்கு தெரியவில்லை


MADHAVAN
மே 08, 2024 11:11

இந்த மனிதரைப்பற்றி பேசுவதுகூட தேவையில்லாதது ,நாட்டில் எவ்வளவோ நடக்கிறது அதைப்பற்றி போடுங்க,


தமிழ்வேள்
மே 08, 2024 11:00

ஆக போலீசுக்கு இனி சீருடை தேவையில்லை ஒரு குறிப்பிட்ட கட்சி கரைவேஷ்டி கட்டிக்கொண்டு, கட்சியிலேயே சம்பளம் வாங்கிக்கொண்டு, உ பி யாக பணியாற்றலாம் மாநில போலீஸ் மத்திய உள்துறை கண்ட்ரோலுக்கு கொண்டுவரப்பட்டால்தான் லோக்கல் கட்சிகளின் அட்டகாசம் கட்டுக்குள் வரும்


MADHAVAN
மே 08, 2024 10:47

அவனுக்கு வாய் ல நாலு சாத்து சாத்தி அனுப்புங்க, அப்போதான் இந்த கிறுக்கன் பெண்களை இழிவாகப்பேசமாட்டான்


Kumaran
மே 08, 2024 09:09

அராஜகம் என்றும் வென்றதில்லை ஒருவர் செய்த குற்றத்தைவிட தண்டனை அதிகமானால் தண்டனை கொடுப்போர் பெறப்போவதை இறைவனே அறிவார்


P Karthikeyan
மே 08, 2024 08:22

தன்னை ஊடகவியலாளர் பத்திரிகையாளர் என்று தனக்கு தானே கூவிக்கொள்ளும் டிங் டாங் ஆசாமி தான் அடுத்த குறி சங்கருக்கு இது தேவை தான் மோடியை பற்றி எவ்வளவு தர குறைவாக பேச முடியுமோ அவ்வளவும் பேசி உள்ளார் மோடியின் தாயாரை பற்றி இழிவாக பேசியுள்ளார் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சங்கரை இப்போது கண்டுகொள்ள அதிமுகவே தயாராக இல்லை அவ்வளவு தான் அரசியல்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை