உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பாடல்கள் உரிமம் தொடர்பாக பாடலாசிரியர்களும் உரிமம் கோரினால் என்னவாகும் என இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j9y2rblo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை விதித்தனர். படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதால் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், ‛இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் சம்பளம் வழங்கிவிட்டார். அதன்படி அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்றுவிடும் அதன் அடிப்படையில் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டது' என்று கூறினார்.இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், ‛இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் சம்பந்தப்பட்டது. இதற்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‛அப்படி என்றால் ஒரு பாடல் என்பது பாடலாசிரியரின் பாடல் வரிகள் மற்றும் பாடகர்கள் சேர்ந்து தான் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல்கள் இல்லை. பாடலாசிரியர்களும் உரிமை கோரினால் என்னவாகும்' என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

கீரன் கோவை
ஏப் 27, 2024 22:09

நிறுவனங்கள் இசையமைப்பாளருடன் மட்டுமே ஒப்பந்தம் போடுகின்றன பாடலாசிரியர் இசையமைப்பாளர் சொன்னபடி தான் எழுதித் தருகிறார் நிறுவனங்கள் பாடலாசிரியருடனும் ஒப்பந்தம் போட்டிருந்தால் இந்தக் கேள்வியில் நியாயம் உள்ளது எனலாம் உதரணத்துக்கு முத்துவுக்கு இளையராஜா வேலை தருவதில்லை


vijayakumar
ஏப் 27, 2024 19:35

Another question the same will be applicable to the the background music players Persons who sang Endless


Madhavan
ஏப் 27, 2024 17:01

இளையராஜா அவர்கள் இப்படி செய்து பார்க்கலாம் அதாவது இது வரை தான் இசையமைத்த அனைத்து பாடல்களிலிருந்தும் வெளிவரும் பின்னணி வாத்தியக்காரர்களின் ஒலிகளை, ஹம்மிங் முதற்கொண்டு அனைத்தையும் கம்ப்ம்யூட்டர் மூலம் அழித்துவிட்டு பாடலை மட்டும் இனி அனைவரும் பாட வேண்டும் மற்றவர்கள் கேட்க வேண்டும் அப்படி செய்தால் தனக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை குறித்த சதவிகிதத்தில் பாடல் ஆசிரியருடன் ஒப்பந்த அடிப்படையில் பகிர்ந்து கொள்வேன் என சொல்லவேண்டும் சொல்கிறாரா பார்ப்போம்


sudharman
ஏப் 27, 2024 11:14

அப்போ ராஜாவுக்கு கற்று கொடுத்தவர்களுக்கு இவர் கட்டணம் செலுத்துவரா இசை அறிவு சங்கீதம் சொல்லி கொடுத்தவர்களுக்கு இவர் ராய்லட்டி கொடுப்பாரா


திண்டுக்கல் சரவணன்
ஏப் 26, 2024 21:17

நாமாக இருந்தால் விட்டுக்கொடுத்துவிடுவோமா என்ன? இளையராஜா தான் இசை அமைத்த பாடல்களுக்கு உரிமை கோருகிறார் நீதிமன்றம் இதை முடிவு செய்யும்


Rahulakumar Subramaniam
ஏப் 26, 2024 18:38

பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னவாகும் ? சரியான கேள்வி ஐயா


K.n. Dhasarathan
ஏப் 25, 2024 21:39

இந்த இளைய ராஜாவிற்கு என்னவாயிற்று ? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாரா? ஒரு பாடல் என்பது பல பேருடைய கூட்டு முயற்சி எத்தனை பேருக்கு ராயல்டி கொடுக்க முடியும் ? அந்த வக்கீல்கள் எப்படி இந்த கேஸ் ஐ எடுத்தார்கள் ? பைத்தியக்காரத்தனம்


ashokkumar ashok
ஏப் 25, 2024 21:20

‛அப்படி என்றால் ஒரு பாடல் என்பது பாடலாசிரியரின் பாடல் வரிகள் மற்றும் பாடகர்கள் சேர்ந்து தான் உருவாகிறது வரிகள் இல்லை என்றால் பாடல்கள் இல்லை பாடலாசிரியர்களும் உரிமை கோரினால் என்னவாகும்


KRISHNAN R
ஏப் 25, 2024 13:06

ஒரு சினிமா தயாரிக்கும் போதுஅதில் எல்லாமே உள்ளடங்கி இருக்கும் தயாரிப்பாளர் அனைத்திற்கும் உரிமையானவர் தனி நபர் தனி உரிமை வேண்டும் என்று கேட்டால் தயாரிப்பாளரிடம் கேட்டு பெற முடியும்


visu
ஏப் 25, 2024 08:08

இசைக்கு மொழி கிடையாது என்பார்கள் இவரது இசையை பிரித்து ரசிக்க முடியும் ஆனால் இன்றைய பல பாடல்கள் வார்த்தைகளுக்கு அர்த்தமே இருக்காது தவிர அவர் பாடலாசிரியருக்கு வரிகள் மேல் உரிமை இல்லை என்று சொல்லவில்லையே அது பாடலாசிரியர் பிரச்சினை அவர் வேண்டுமென்பதை கேட்டு வாங்கி கொள்ள வேண்டியது இளையராஜா கேட்பது அவர் இசைக்கு மட்டுமே ஒரு டொயட்டா கார் வாங்குகிறீர்கள் அது யார் கார் உங்களுடையது ஆனால் காரில் ஒரு குறைபாடு என்றால் அது டொயட்டா பிரச்சினை இதை பொருத்தி பாருங்கள்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ