உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எதிர்த்து போட்டியிட்டால் விஜய் என்ன ஆவார்?

 எதிர்த்து போட்டியிட்டால் விஜய் என்ன ஆவார்?

திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபத்தை துாணில் ஏற்றலாம் என, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல நாடகமாடி, அம்மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஓட்டுகள் சிதறி, அக்கட்சி தோற்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா என்பது குறித்து, யூகமாக எதையும் சொல்ல முடியாது. த.வெ.க., தலைவர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க விருப்பதாக சொல்கின்றனர். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரை சந்திக்க வேண்டும் என்பதை அமித் ஷா முடிவெடுப்பார். என்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் கமல், இப்போது தி.மு.க.,வில் கரைந்திருக்கிறார். அதேபோல நடிகர் விஜய் , என்னை எதிர்த்து போட்டி யிட்டால் என்ன ஆவார் என்பது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. -- வானதி சீனிவாசன் பா.ஜ., - எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி