| ADDED : மார் 10, 2024 05:41 PM
சென்னை: தி.மு.க., கூட்டணியில் இணைந்தது ஏன்? என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். வீடியோவில், தேச நலன் என்று வரும் போது சிறு சிறு விஷயங்களை விட்டுக்கொடுக்க தயார் என கமல் கூறியுள்ளார்.முதன்முறையாக கூட்டணி அமைப்பதால் தனக்குரிய கவுரவம் தருவார்கள் என கமல் கருதினார். தி.மு.க., தலைமையிடம் பேசியபோது 'ஒரு 'சீட்'தான் தருவோம். அதுவும் தி.மு.க., சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை கமல் ஏற்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=asgjh5db&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து அடுத்தாண்டு தி.மு.க.,வின் ராஜ்யசபா 'சீட்' ஒன்றை தருகிறோம்' என பேசப்பட்டது. இதையும் வேண்டாம் என்று சொன்னால் சிரமம் தான் எனக் கருதி கமல் ஒத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தற்போது கமல் தி.மு.க., கூட்டணியில் இணைந்தது தொடர்பாக சமூகவலைதளத்தில் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.இந்நிலையில் தி.மு.க., கூட்டணியில் இணைந்தது ஏன்? என்பது குறித்து கமல் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் கமல் பேசியதாவது: தேசத்திற்காக நாமெல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். இது அவசர நிலை. தமிழகம் மற்றும் தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு. எதிர்வாத சக்திகளுக்கு தற்போதைய சூழல் கைக்கூடி விடக் கூடாது என்பதற்காக தி.மு.க., உடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளேன். தேச நலன் என்று வரும் போது சிறு சிறு விஷயங்களை விட்டுக்கொடுக்க தயார். இவ்வாறு அவர் பேசினார்.