கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலர் சரோஜினி சர்மா அனுப்பிய கடிதத்தில், திட்ட அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன. கோவையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்தது. முதலில் திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நான்கு வழித்தடங்களில், 144 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்க ஆலோசிக்கப்பட்டது. இரு வழித்தடங்கள் முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தியமங்கலம் ரோடு என இரு வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன. உத்தேசமாக, 10,740 கோடி ரூபாயில், 34.4 கி.மீ., துாரத்துக்கு, 32 நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழுவினர் கள ஆய்வு செய்தனர். இத்திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியது. அதை பரிசீலித்த மத்திய அரசு, 'மெட்ரோ ரயில்' கொள்கையை சுட்டிக்காட்டி, சி.எம்.பி., எனப்படும் முழுமையான நகர போக்குவரத்து திட்ட அறிக்கை கேட்டு திருப்பி அனுப்பியது. அதன்பின் கூடுதல் ஆவணங்கள் இணைத்து மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த சூழலில், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலர் சரோஜினி சர்மா, தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மை செயலருக்கு, மூன்று பக்க கடிதம் அனுப்பிஉள்ளார். அதில், மூன்றாம் பக்கத்தில் இருந்த தகவல்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பரவவிட்டு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது. ஒப்புதல் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, தமிழக அரசு இடையே 50:50 சதவீத நிதி ஒதுக்கீடு அடிப் படையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, 2024 பிப்., 16 மற்றும் 2024 நவ., 29 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பி ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, மெட்ரோ ரயில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, விரிவான திட்ட அறிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட்டது. சராசரி பயண வேகம் கோவை மாநகராட்சி பகுதியில் சராசரி பயண வேகம், மணிக்கு 21.7 கி.மீ., உள்ளூர் திட்ட குழும பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ., பீக் ஹவர்ஸ் சமயத்தில் சராசரி வேகம், மணிக்கு 23.1 கி.மீ., பயணியருடன் செல்லும்போது 14.09 கி.மீ.,க்கு சராசரி பயண நேரம் 27.96 நிமிடங்கள். நகர்ப்புற வழித்தடத்தில் சராசரி வேகம், மணிக்கு 30 கி.மீ., மெட்ரோ ரயில் சராசரி வேகம், மணிக்கு 34 கி.மீ., இதன்படி கணக்கிட்டால், சாலையில் இயக்கப்படும் போக்குவரத்து சராசரி வேகம், 'மெட்ரோ' வேகத்துக்கு சமமாகவே இருக்கிறது. கார் பயணத்தின் சராசரி துாரம் 7.5 கி.மீ., இருசக்கர வாகன பயணம் 5.8 கி.மீ., பஸ் பயணம் 7.3 கி.மீ., தொடர்ச்சி 2ம் பக்கம்
முக்கியமான மூன்று விஷயங்கள்
விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ள கடிதத்தில், மூன்று முக்கிய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன . 1 வழித்தடத்துக்கான சாலை வசதி, 22 மீட்டர் அகலத்துக்கு இருக்க வேண்டும். 22 மீட் டர் அகலம் சாலை இல்லாத இடங்களில் நிலம் கையகப் படுத்த வேண்டும். மெட்ரோ செல்லும் வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை இடித்து கையகப்படுத்த வேண்டும். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலத்தை பெறுவதற்கு அதிக பொருட்செல வாகும். இது, பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். 2 மக்கள் தொகை திட்ட அறிக்கையில், 2011 மக்கள் தொகையை குறிப்பிட்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு, கோவைக்கு எந்தெந்த நகரங்களில் இருந்து வந்து செல்கின்றனர், எந்தெந்த வகைகளில் மெட்ரோ ரயில் அவசியம் என்ற கூடுதல் அறிக்கையை இணைத்திருக்க வேண்டும். 3 மெட்ரோ ரயில் பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 5.9 லட்சம் பேர் செல்வர் என கணித்திருப்பது அதிகபட்சமாக இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், பஸ் மற்றும் கார்களில் பயணிப்பவர்கள், மெட்ரோவுக்கு மாறுவரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மெட்ரோவில் லட்சக்கணக்கான பயணியர் செல்வர் என்றால், அவ்வழித்தடத்தில் இதர வாகனங்கள் அனுமதிக்கப்படாதா என்ற கேள்வியும் எழுகிறது. -நமது நிருபர் -