வன உயிரினங்களுக்கு கோவையில் சிகிச்சை மையம்
சென்னை:கோவை வனக்கோட்டத்தில் உள்ள பெத்திகுட்டையில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில், மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மாநிலத்தில் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக, 131 ஏக்கர் பரப்பளவில், சிறுமுகையில் உள்ள மோடூர் - பெத்திக் குட்டை காப்புக் காட்டில், வன உயிரினங்களுக்கான முதல் அதிநவீன மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.