உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பா? நடவடிக்கை பாயும் என்கிறார் மந்திரி

அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பா? நடவடிக்கை பாயும் என்கிறார் மந்திரி

சென்னை: அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திறப்பு விழாவுக்காக காத்திருக்காமல், மருத்துவக் கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி, கன்னியாகுமரியில் 7.35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 15 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.அதேபோல, தென்காசியில் 9.02 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 16 புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருந்தது.தென்காசியில் பங்குனி உத்திரம் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. இதனால், அம்மாவட்டத்தில் நடக்க இருந்த புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி, வேறு ஒரு நாள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசியில் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு, பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Bhaskaran
ஏப் 11, 2025 22:38

வசூல் பண்ண சொன்னது நீங்க தானே ஐயா


பல்லவி
ஏப் 11, 2025 20:30

அது தான் எல்லா மட்டத்திலும் collection நடக்குது பணம் பணம் பணம்


Perumal Pillai
ஏப் 11, 2025 18:17

வசூல் பண்ண சொன்ன அந்த சார் எந்த சார் ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 11, 2025 10:44

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை அமைச்சர் நேரு விசாரிக்கறதும், தென்காசி அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிக்கறதைப் பத்தி மாசு விசாரிக்கறதும், ரெண்டும் ஒண்ணுதானே


sankar
ஏப் 11, 2025 10:19

பாவம்- வாயில விரலை விட்டா கடிக்ககூட தெரியாது


kmathivanan
ஏப் 11, 2025 10:12

வசூலிக்க சொன்ன சாரே யார் அந்த சார்தானே


vijai hindu
ஏப் 11, 2025 09:57

வசூல் வெளியில் சொன்னால் நடவடிக்கை பாயும் எச்சரிக்கை


angbu ganesh
ஏப் 11, 2025 09:56

படிப்பறிவே இல்லயாம் சுகாதார அமைச்சராம் வெக்க கேடு


rajan_subramanian manian
ஏப் 11, 2025 09:35

இந்த வசூலை வெளியில் சொன்ன ஆள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.


sankaranarayanan
ஏப் 11, 2025 09:34

அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பா? நடவடிக்கை பாயும் என்கிறார் மந்திரி அப்பப்பா என இது வியப்பாகவே உள்ளதே என்ன சார் ஒன்றன்மே தெரியாததுபோன்று நடிக்காதீங்க சார் இது போன்ற வசூல்கள் சார் இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன சார் நடிக்ககூடாது சார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை