உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: குஷ்பு

சென்னை: ‛‛ தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை'', என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. இது முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியும். அவர் கட்சி எம்.எல்.ஏ., மகன் வீட்டிலேயே ஒரு பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது. அவருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினாரா? ஆதரவாக இருப்பேன் எனக் கூறினாரா? எதுவும் கூறவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rgb0r5u0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெண்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியதை பார்த்தது கிடையாது. தேசிய மகளிர் ஆணையத்திற்கு பொய்யான வழக்குகளும், பழிவாங்கும் வகையிலும் வழக்குகள் வரும். ஆனால், அதில் ஆராய்ந்து உண்மையான வழக்குகளை எடுத்து விசாரித்து வருகிறோம். அது குறித்து போலீசாரிடம் பேசியுள்ளோம். பீஹார், ஆந்திராவில் இருந்து அதிகளவில் வழக்குகள் வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தூய்மைப் பணி

சென்னை ஆதி கேசவ பெருமாள் கோயிலில் நடிகை குஷ்பு இன்று தூய்மைப் பணி மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை