உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இருப்பது சிறை: போட்டியிடுவது பல்கலை வேந்தர் பதவிக்கு: இம்ரான்கான் ஆசை

இருப்பது சிறை: போட்டியிடுவது பல்கலை வேந்தர் பதவிக்கு: இம்ரான்கான் ஆசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை வேந்தர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் புகாரில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரால் அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இம்ரான் கான், பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் தத்துவவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். இப்பல்கலை வேந்தராக உள்ள கிறிஸ் பாட்டன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு போட்டியிட இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது கட்சியை சேர்ந்தவரும், லண்டனில் வசிப்பவருமான சயீத் ஜல்பிகார் புகாரி மூலம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.இப்பல்கலை வேந்தரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும். அக்.,மாதம் இறுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறும். அம்மாதத்தின் துவக்கம் வரை யார் யார் இத்தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியிடப்படாது.இம்ரான் கான், ஏற்கனவே பிரிட்டனின் பிராட்போர்ட் பல்கலை வேந்தராக 2005 முதல் 2014 வரை பதவி வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 20, 2024 17:04

மதிப்பிற்குரிய மாண்புமிகு டில்லி முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து நிர்வாகம் செய்வது எப்படி என்று சொல்லி கொடுப்பார்.


ஆனந்த்
ஆக 20, 2024 13:54

இவர் வெற்றி பெற்றால், சிறையில் இருந்து எப்படி நிர்வாகம் செய்வார்.


Anandh
ஆக 20, 2024 13:52

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். இவரை பார்த்து இந்த பழமொழி தான் நியாபகம் வருகிறது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை