உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛வழி மேல் விழி வைத்து மோடிக்காக காத்திருக்கும் போலந்து வாழ் இந்திய வம்சாவளியினர்

‛வழி மேல் விழி வைத்து மோடிக்காக காத்திருக்கும் போலந்து வாழ் இந்திய வம்சாவளியினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வார்சாவ் : அரசு முறை பயணமாக போலந்து வரும் பிரதமர் மோடியை எதிர்பார்த்து காத்து இருப்பதாக அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தெரிவித்து உள்ளனர்.பிரதமர் மோடி வரும் 21- 23 ஆகிய தேதிகளில் போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். அங்கு அந்நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். இந்தியா - போலந்து இடையிலான தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மோடியின் பயணம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து உள்ளது.பிரதமரின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து உள்ள இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளுக்காக புகழாரம் சூட்டி உள்ளனர்.இது தொடர்பாக இந்திய வம்சாவளியினர் சிலர் கூறியதாவது:

மும்பையில் இருந்து அங்கு குடியேறிய சவுரப் கிலிட்வாலா

நாட்டை தன்னிறைவு பெற செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மோடியின் பயணம் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என்றார்.

அஜய் சர்மா

பிரதமரின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு நகரங்களில் வசிக்கும் எனது நண்பர்கள், மோடியின் பயண திட்டம் குறித்து கேட்கின்றனர். வார்சாவ் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளோம். 40 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து தலைவரை பார்ப்பதில் பெருமையாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறும் என்றார்.

வான்யா என்ற 9 வயது சிறுமி

குழந்தைகள் என்றால் குழந்தைகளுக்கு பிடிக்கும். அவர் காட்டும் அன்பு மற்றும் நேசம் ஆகியவை காரணமாக அவரை எனக்கு பிடிக்கும் என்றார்.

இந்திய மாணவர்கள் சங்க தலைவர் கவுரவ் சிங்

இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறாரா இல்லையா என தெரியவில்லை. மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவரது வருகையால் உறவு வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

tmranganathan
ஆக 21, 2024 18:26

நான் என் மகன் குடும்பத்தினரோடு வசிக்கும் போலந்து,அற்புதமான நாடு. ஐரோப்பாவில் வேகமாக உயரும் நாடு. நம்மைப்போல் ரஷ்யா ஜெர்மனி நாடுகளால் சுரண்டப்பட்டது கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக முன்னேறி விட்டது. வளம் செழித்த நாடு மக்கள் உழைப்பாளிகள். விவசாயம் எரிசக்தி தொழில்களில் உயர பராக்கும் நாடு. நான் நேரில் கண்ட அனுபவம். மக்களை அரசாங்கம் பாதுகாக்கும் விதம் சிறப்பானது.


Narayanan Muthu
ஆக 20, 2024 13:33

பரிதாபத்திற்குரிய விட்டில் பூச்சிகள். உள்ளூர் சந்தையில் விலை போகாததை வெளியூர் சந்தையில் விற்க பார்த்தானாம் கதைதான் இது.


ஆரூர் ரங்
ஆக 20, 2024 13:55

லஞ்சத்துக்கு விலை போவது காங்கிரஸ் கலாச்சாரம். தனக்காகவோ தனது குடும்பத்தினருக்காகவோ எவ்வித ஊழலிலும் ஈடுபடாத மோதி வருகையை எதிர்பார்ப்பது அவர்களது கலாச்சாரம்.


A.C.VALLIAPPAN
ஆக 20, 2024 16:03

உன்னக்கு என்ன கேடு 200 ரூபாயும் பாட்டில் சொந்த போன்


Sakthi,sivagangai
ஆக 20, 2024 18:47

நாராயணா அறிவால அடிமை வேலையை மட்டும் பார் உலக அரசியல் பற்றி பேசுவதற்கான தகுதி உனக்கில்லை...


M Ramachandran
ஆக 20, 2024 18:48

பங்ளா தேசத்திற்கோ பாகிஸ்தானுக்கோ போய் விடு உனக்கேற்ற இடம்


Narayanan Muthu
ஆக 20, 2024 19:44

பிஜேபியின் ஊழல்கள் துர்நாற்றமெடுத்து நாடே முகம் சுளித்தது மறந்து விட்டதா இல்லை செலெக்ட்டிவ் அம்னீஷியாவா


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை