உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்

பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்

துபாய்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை அவர் திறந்து வைக்கிறார்.முன்னதாக, அங்குள்ள சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. 'அஹலான் மோடி' அதாவது 'வணக்கம் மோடி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்க, எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான புருஷோத்தமன் கூறுகையில், ''நேற்று முன்தினம் இரவு முதல் அபுதாபியில் விடிய விடிய கனமழை கொட்டியது; கடந்த சில நாட்களாக பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. ''இதனால் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 60,000 பேருக்கு பதிலாக 35,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.n. Dhasarathan
பிப் 13, 2024 11:04

அரபு முஸ்லீம்களுக்கு மனது பெரிது கோயிலாயும் கட்டி, திறப்பு விழாவுக்கு பிரதமரையும் அழைக்கிறார்கள் ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? எங்காவது முஸ்லீம் மாஸ்க் கட்டினோமா? சர்ச் கட்டினோமா? அட ஒரு விழாவுக்காவது போயிருக்கோமா? யார் உண்மையில் சிறந்தவர் ?


A1Suresh
பிப் 13, 2024 11:46

திருக்கோயிலை காட்டியது குஜராத்திகள் .


Ravichandran,Thirumayam
பிப் 13, 2024 18:09

ஏலேய் போலி பெயரில் உள்ள மூர்க்கனே நீ சொல்ல வந்ததை உன் உண்மையான பெயரில் தைரியமாக கூறு அதைவிட்டு கோழை போல...


Ramesh Sargam
பிப் 13, 2024 07:16

ஜனவரி 22 அன்று இந்தியாவின் அயோத்தியில் திருவிழா சிறப்பாக நடந்தேறியது. பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் மற்றுமொரு ஹிந்து கோவில் திறப்பு விழா. ஜெய் ஸ்ரீ ராம். பகவான் ஸ்வாமி நாராயன் கி ஜெய் ஹோ. அந்நாட்டு மன்னர் மற்றும் மக்களுக்கு நன்றி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை