உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிருஷ்ணாவுக்கு இலங்கை பாராட்டு

கிருஷ்ணாவுக்கு இலங்கை பாராட்டு

கொழும்பு: 'கச்சத் தீவு இலங்கையின் எல்லைக்குள் உள்ளது. இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடிக்க, இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை' என, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதற்கு, இலங்கைப் பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கை வாழ் தமிழர்கள் விவகாரம் குறித்து சமீபத்தில் பார்லிமென்டில் நடந்த விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, 'கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. அதனால் இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடிக்க சர்வதேச கடல்சார் சட்டப்படி இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை' என தெரிவித்தார். இதுகுறித்து, இலங்கையில் இருந்து வெளிவரும், 'லங்காதீபா' என்ற பத்திரிகையின் தலையங்கத்தில், 'கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது தான் என தெளிவுபடுத்திய இந்திய அமைச்சருக்கு இலங்கை தன் பாராட்டைத் தெரிவிக்கிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை