மேலும் செய்திகள்
மில்க் ஸ்வீட் இல்லாமலா!
16-Oct-2025
மைசூர்பாவை ராஜ சுவை என அழைத்தால் தவறில்லை!
16-Oct-2025
குலோப் ஜாமூன் கடந்து வந்த பாதை!
16-Oct-2025
மலாய் பேடா
05-Oct-2025 | 3
முழு தானியங்கள் எனப்படும் கம்பு, கேழ்வரகு, சோளம், பார்லே, மக்காச்சோளம் மற்றும் கோதுமை வகைகளில் கிளைசெமிக் குறியீடு குறைவு. இதனால் கார்போஹைட்ரேட் உணவுகளைப் போன்று ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாமல், நிர்வகிக்க உதவும். ஒரு காலத்தில் நமது கிராமங்களில் அன்றாட உணவாக இருந்த இவை இன்று அரிதான உணவாகிவிட்டது.
முழு தானியங்கள்
மேலே கூறிய சோளம், கம்பு, கோதுமை போன்ற தாவரங்களின் விதைகளையே முழு தானியங்கள் என்கிறார்கள். பதப்படுத்தப்படாத முழு தானியங்கள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். தவிடு, எண்டோஸ்பெர்ம் மற்றும் விதையின் உட்கரு. தானியத்தின் மையப் பகுதியான எண்டோஸ்பெர்ம் தான் மாவுச்சத்தின் மூலம். நாம் தவிடு என நீக்கும் மேல் தோலில் தான் கரையாத நார்ச்சத்து, பி வைட்டமின்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் இருக்கின்றன. விதையின் கருவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ உள்ளிட்டவை உள்ளன.ஏன் முழு தானியங்கள் நல்லது
ஒவ்வொரு கிழமை ஒரு முழு தானியம் என முடிவு செய்துகொண்டு சாப்பிட வேண்டும். பிரவுன் அரிசி, ஓட்ஸ், மரகோதுமை என ஏராளமான முழு தானியங்கள் உள்ளன. அவற்றை பிடித்தது போல் சமைத்துச் சாப்பிடலாம். வெள்ளை அரிசிக்கு பதில் பிரவுன் அரிசியைப் பயன்படுத்தலாம். மக்காச்சோளத்தை பாப்கார்ன் செய்து சாப்பிடலாம். இனிப்பு, உப்பு சேர்க்கக் கூடாது. தற்போது முழு தானிய பிரட்கள் கூட கிடைக்கின்றன. அதையும் சாப்பிடலாம்.
16-Oct-2025
16-Oct-2025
16-Oct-2025
05-Oct-2025 | 3