ஒரு பள்ளி பெருமை கோரிக்கை
'அடடே... வா... வா... உள்ளே வா...' திருப்பூர், உடுமலைப்பேட்டை, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தன் மாணவ மாணவியரின் பிறந்தநாளில் இப்படித்தான் பரவசப்படுவார்; புத்தகம் பரிசளித்து மகிழ்விப்பார்! பள்ளி: சின்னவீரம்பட்டியின் பிரதான சாலையில் இருக்கிறது இப்பள்ளி. மழை கழுவிய சாலை போல் 'பளிச்'சென்று பள்ளி வளாகம். 700 மாணவ மாணவியர் படிக்கும் இப்பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளும், கணினி ஆய்வகங்களும் தனியார் பள்ளி தரத்திற்கு சவால் விடுகின்றன! பெருமை: 'நான் ஐந்தாம் வகுப்புல இருந்து 'ஸ்கூல் ப்ரேயர்'ல செய்தி வாசிக்கிறது, திருக்குறள் சொல்றதுன்னு பேச்சு பயிற்சி எடுத்துக்கிறேன். இப்போ, பேச்சு போட்டிகள்ல கலந்துக்குறேன். என்னை இப்படி ஆளாக்கின பள்ளியோட பெருமையை என் பேச்சு மூலமா உலகத்துக்கு சொல்லிக்கிட்டே இருப்பேன்!' - 7ம் வகுப்பு மாணவி சவுபர்ணிகா.கோரிக்கை: '1925ல் வெள்ளைக்காரன் காலத்துல திண்ணை பள்ளியா, அப்புறம் துவக்கப் பள்ளியா, இன்னைக்கு நடுநிலைப்பள்ளியா 100 வருஷம் பார்த்திருச்சு இந்த பள்ளிக்கூடம். கூடுதல் வகுப்பறைகளும், கலையரங்கமும் கேட்டு 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்துல பதிவு செஞ்சுட்டு காத்திருக்கோம்!' - தலைமை ஆசிரியர் இன்பக்கனி.