உள்ளூர் செய்திகள்

மனம் கொத்தி பறவை

செயற்கை கை தயாரிப்பில் 2019 முதல் இயங்குகிறது இந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்; இதன் உரிமையாளர், தன் 24 வயதில் வலக்கரத்தை இழந்ததே இதன் உதயத்திற்கு காரணம்! இந்த வார மனம் கொத்தி: ரிஷிகிருஷ்ணா அடையாளம்: சிம்பயோனிக் இருப்பிடம்: வடபெரும்பாக்கம், சென்னை.'பெரும் விலை; அதீத எடை; பழுது நீக்கும் சேவை குறைபாடு - இவைகளே கையிழந்தவர்கள் செயற்கை கை தவிர்க்கும் காரணங்கள்' என்பதை உணர்ந்ததுதான் ரிஷியின் முதல் கள ஆய்வு தந்த முடிவு! பிறகு... 'கிட்டத்தட்ட இயற்கையான மனித கரம் மாதிரியே இயங்குற 'பயோனிக்' கை பொருத்திக்கணும்னுதான் நான் ஆசைப்பட்டேன்; ஆனா, அதோட விலை ரூ.40 லட்சம்; கைமூட்டு தசை அசைவுக்கு ஏத்த மாதிரி செயல்படுற சென்சார் கருவி அது; எடை... இரண்டு கிலோ! அதை தவிர்த்து, 'க்ரியா அடாப்டிவ் கை தயாரிக்கணும்'னு முடிவு பண்ணினப்போ, நண்பன் நிரஞ்சன்குமார் தொழில்நுட்ப உதவிக்கு வந்தான். வி.ஐ.டி., பல்கலைக்கழகம் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையும், 'மாதிரி கை' தயாரானதும் உற்பத்திக்காக ரூ.30 லட்சமும் தந்தது. இப்போ, அதானி குழுமத்தோட 50 லட்சம் ரூபாய்ல 100 'க்ரியா அடாப்டிவ்' கைகள் தயாராயிட்டு இருக்கு! சொன்னபடி கேட்கும் கைநான் தயாரிச்ச இந்த முழங்கையை கை மூட்டுல மாட்டிக்கிட்டு, இதோட உடற்பயிற்சி, நீச்சல், லேப்டாப், இசைக்கருவி, கேமரா இயக்கம்னு வேலைக்கு தகுந்தபடி வெவ்வேறு விதமான மணிக்கட்டு பகுதிகளை இணைச்சுக்கலாம். இப்போதைக்கு மூன்றுவிதமான மணிக்கட்டு பகுதிகளை தயாரிச்சிருக்கேன்! எடை, விலையை கட்டுப்படுத்துற விதமா கைமூட்டோட இணைக்குற 'ப்ராஸ்தெடிக் சாக்கெட்'கள் 'பிஏ12 நைலான்'லேயும், இணைப்பு மணிக்கட்டு பகுதிகள் 'சிந்தெட்டிக்'லேயும் தயாராகி இருக்கு. ஒரு கிலோ எடையுள்ள இதோட விலை 50 - 60 ஆயிரம் ரூபாய்! இந்த கைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டுல இயங்குற, 'சி.டி.எஸ்.இ.ஓ.,'ங்கிற தேசிய ஒழுங்குமுறை அமைப்போட சான்றிதழும், ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழும் இருக்கு. 18 மாத கால உத்தரவாதமும் தர்றேன்.ரிஷியின் கனவுகைமூட்டு தசைகளின் அசைவுகளை உள்வாங்கி சென்சார், மோட்டார் மூலமாக இயங்கும், 'பயோனிக்' கை உருவாக்கத்தில் தீவிரமாக இருக்கும் ரிஷி, 'வெறும் மூன்று லட்சம் ரூபாய்க்கு அதனை விற்பனை செய்யணும்ங்கிறது என் கனவு' என்றபடி தீவிரமாய் உழைத்து வருகிறார். ரிஷிகிருஷ்ணா74188 81800மனதில் இருந்து...'இந்த 'க்ரியா அடாப்டிவ்' கை உதவியோட உணவு, மளிகை பொருட்கள் நிறுவன விநியோகப்பணியாளரா திருப்தியா வேலை பார்க்குறேன்; மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்!' - சுரேஷ், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !