மனம் கொத்தி பறவை
கடலில் கைவிடப்பட்ட, கடலில் தொலைந்து போன மீன்பிடி வலைகளை 'பேய் வலை' என்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடான இப்பேய் வலைகளை மேல்சுழற்சி முறையில் வீட்டு உபயோக மற்றும் அலங்காரப் பொருட்களாக இவர்கள் மாற்றித் தருகின்றனர். இந்த வார மனம்கொத்தி: கி.சுகன்யா, லீ.கிறிஸ்டினாள், மெ.ரோஸி மற்றும் நி.சலேசி அடையாளம்: சமுத்திர பெண்கள் குழு இருப்பிடம்: தங்கச்சிமடம், ராமநாதபுரம். ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக பங்களிப்பிலான 'எஸ்.ஜி.பி., - இந்தியா' திட்டத்தின் கீழ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலில் 2024ல் துவக்கப்பட்டது இந்த சமுத்திர பெண்கள் குழு. அறியாமை போக்கும் தயாரிப்புகள் 'மெழுகுவர்த்தி தயாரிப்பு, கருவாடு மதிப்புக்கூட்டல்னு பல சுயதொழில் அனுபவத்துக் கு அப்புறம்தான் இந்த தொழி லுக்கு வந்தேன். இந்த தொழிலைவிட இதோட நோக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது. பேய் வலைகளால கடல்ல ஏற்படுற பாதிப்புகளை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் எனக்கு புரிய வைச்சாங்க! 'கடல்ல இருந்து அகற்றப்பட்ட பேய் வலைகள் திரும்ப கடலுக்குப் போகாம இருக்கணும்னா, ஏதோவொரு பயன்பாடுள்ள பொருளா அது மாறணும். இயற்கைக்கான உலகளாவிய நிதியம், 2021ம் ஆண்டு நடத்தின 15 நாட்கள் பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். நான் கத்துக்கிட்டதை என் குழுவினருக்கும் சொல்லிக் கொடுத்தேன்!' - இது, இக்குழுவில் ஒருவரான கிறிஸ்டினாளின் அனுபவம். இவரைத் தொடர்ந்து தயாரிப்பு, விற்பனை குறித்து பகிர்கிறார் ரோஸி ... 'தரை விரிப்புகள், பழக்கூடை, 'லேப்டாப்' பேக், உணவுமேஜை விரிப்புகள், கீ செயின், வளையல், கைப்பை, சுவர் அலங்கார பொருட்கள்னு எட்டுவிதமான பொருட்களை தயாரிக்கிறோம். இப்போதைக்கு எங்க வீடுகள்ல இருந்துதான் பொருட்களை சந்தைப்படுத்துறோம். 'ஆன்லைன்' வர்த்தகத் துக்கு முயற்சி எடுத்துட்டு இருக்குறோம்!' அகலக்கால் வைக்காததன் பலன் 'பேய் வலைகளை உருக்கி வேறொரு பொருளா தயாரிக்கி ற துக்கு அதிக முதலீடு தேவை; இந்த மறுசுழற்சி வழிக்கு மாற்றா, பின்னல் முறையில வலைகளை மதிப்புமிக்க பொருளா மாத்துற மேல் சுழற்சி வழியை தேர்வு செஞ் சிருக் கோம். இதனால, பெரிய லாபம் இல்லேன்னாலும் இழப்பு அதிகம் இல்லை!' - இது, சுகன்யா மற்றும் சலேசி. மனதில் இருந்து .. . 'பேய் வலைகளால சீரழியுற கடல் வளத்துக்கு பாதுகாப்பு தர்ற காரணத்துக்காகவே இவங்க தயாரிப்புகளை நான் விரும்பி வாங்குறேன்!' - வாடிக்கையாளர் வேல்விழி