வா வாசி யோசி...
திரை நட்சத்திரத்தின் பின்போ... அரசியல்வாதியின் பின்போ செல்லாத இவர்கள், தென்காசி ஜே.பி., கல்லுாரி மாணவர்கள்; இவர்களின் முன்செல்வது யார்?'எடிசனுடன் சில காலம் பணியாற்றிய உலகம் கொண்டாட மறந்த அறிவியலாளர் நிகோலா டெஸ்லா; இன்றைய நவீன மின் பொறியியல் சாதன கண்டுபிடிப்பாளர்களின் முன்னோடி அவர். எதற்கும் உரிமை கோராது, 'மக்கள் நலனே முதன்மை' என்று வாழ்ந்த அவரை நான் பின்பற்றுகிறேன்!'- கா.உதயகுமார், பி.எஸ்சி., முதல் ஆண்டு 'கோவிந்தபேரி கிராமத்தில் மிதிவண்டி ஓட்டிச் சென்றவராகத் தான், சோேஹா நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு அய்யா எனக்கு அறிமுகம். மத்தளம்பாறையில் அவர் துவக்கிய நிறுவனம் கிராமப்புற மாணவர்களின் அறிவை பட்டை தீட்டி வருகிறது. அய்யா... தங்களை வணங்குகிறேன்!' - க.உஷா, பி.எஸ்சி., 2ம் ஆண்டு'ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது நபி; தீவிரவாத அடையாளம் கொண்டிருக்கும் தன் நாட்டிற்கு புதிய அடையாளம் தர 2009ம் ஆண்டு முதல் பெரும் முனைப்போடு களம் கண்டு வருபவர். 'எங்களால் முடியும்போது ஏன் உங்களால் முடியாது' எனும் நம்பிக்கையை தன் செயலால் உணர்த்தும் முகம்மது நபி என் நாயகன்!'- மு.பாலசுப்பிரமணி, பி.காம்., முதல் ஆண்டு