உள்ளூர் செய்திகள்

மிஸ் மூளைக்காரி c/o தமிழ்நாடு

மண்ணை நேசிக்கும் தமிழ் கிழவியும், இன்னும் அவளது விரல் பற்றாத ஒருத்தியும்...'ஈ.வெ.ரா., சொன்ன எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்குறப்போ, 'உடல் இச்சையை தீர்த்துக்க இப்படி சொன்னார்'னு இழிவான விஷயத்தை சொல்றது எந்தவகையில நியாயம்; நீயே சொல்லு மணியாத்தா!''சொல்றேன்... இப்படி வா; விஷ்ணு - லட்சுமி அந்தரங்க விவகாரத்தால் தோன்றியது ராமாயணம்; இதேபோன்ற சிவன் - பார்வதி விவகாரத்தில் தோன்றியது கந்தபுராணம்'னு ஏதேதோ கதைகள்ல படிச்சதா ஈ.வெ.ரா., சொல்றார்! 'ராமாயணம், கந்தபுராணம் பிறப்பு பற்றி சொல்ல எத்தனையோ நற்கதைகள் இருக்குறப்போ, இப்படியான கதைகளை அவர் மேற்கோள் காட்டினது ஏன்'னு நான் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவே?'சரி... இதைவிடு; 'ஒற்றுமைக்கும், திருப்திக்கும், இன்பத்திற்கும் உதவாத பெண்களின் புருஷர்கள் தங்களுக்கு இஷ்டமான பெண்களை மணம் செய்து கொள்ள வேண்டும். மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும், திருப்தியுமாகும்; இதற்கு, ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனமாகும்'னு சொன்னது யாரு?'மக்களின் அன்பும் ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது நியாயமல்ல'ன்னு சொன்னது யாரு?''ஏய் மணியாத்தா... இரு... இரு... நான் என்னன்னு பதில் சொல்லுவேன்; நான் என்ன உன்னைமாதிரி காமராஜர் ஆட்சி காலத்துலேயா படிச்சேன்; நீ என் மனசை கழுவப் பார்க்குறே... நான் கிளம்புறேன் போ...''அடியேய் மூளைக்காரி... இதையும் கேட்டுட்டுப் போடி; 'மனிதன் பலவீனமாய் இருக்கும்போது ஏமாந்துவிடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலை திருத்திக் கொள்ள முயற்சிப்பதும் இயற்கைதான்'னும் ஈ.வெ.ரா., சொல்லி இருக்காருடி!''ம்ஹும்... நீ சொன்னது எனக்கு கேட்கலை!''கேட்காதுடி... கையில 1,000 ரூபாய் இருக்குறப்போ எதுவும் கேட்காது!'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !