மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு
'நான் முதல்வன், புதுமைப்பெண்' திட்டங்களால் சாதித்து, 'கலப்பு மணம்' செய்து, 'சமூக நீதி' காத்த தமிழக தம்பதியின் ஒரு மாலை நேரம்...முன்னாள் முதல்வர் கருணாநிதி சமாதி யில, 'தமிழக அரசு சின்னம்'னு அமைச்சர் சேகர்பாபு அலங்காரம் பண்ணி வைச்சிருந்த கோவில் கோபுரத்தைப் பார்த்ததும்...'கடவுள் இல்லை; கடவுளை பரப்புபவன் அயோக்கியன்; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி'ன்னு ஈ.வெ.ரா., சொன்னதெல்லாம் ஞாபகத்துக்கு வந்திருச்சா பேபி? ச்சே... ச்சே... 'கருணாநிதி சமாதிக்கு வர்ற கடவுள் மறுப்பாளர்களும் கோபுரத்தை கையெடுத்து கும்பிடணும்'னு அமைச்சர் சேகர்பாபு பண்ணின சிறப்பு ஏற்பாடாத்தான் அதை நான் புரிஞ்சுக்கிட்டேன்! ஏன்னா, அவர் 'கடவுள் இருக்குறார்'னு நம்புறவர்; கும்பாபிஷேக எண்ணிக்கை சொல்லி கடவுளை பரப்புறவர்; ஐயப்பனை மனம் உருக வணங்குறவர்!சரிதான்... ஆனா, சமாதி மேல கோபுர அலங்காரத்துக்கு ஒரு ஆன்மிகவாதி அனுமதிக்கலாமா பேபி?இப்படி நீ கேட்டா, 'தன் மதத்தை ஆழமா நேசிக்கிற ஒரு ஹிந்துவா அமைச்சர் சேகர்பாபு ஜெயிச்சிருக்கார்'னுதான் நான் சொல்லுவேன். சமீபத்துல, 'ஹிந்துக்களை ஹிந்துக்களாக உணர வைக்க முடியாததால் பா.ஜ., அவர்களை திசை திருப்புகிறது'ன்னு திருமாவளவன் சொன்னப்போ, ஒரு ஹிந்துவா ரொம்ப வேதனைப்பட்டேன். இப்போ, தன்னை ஒரு ஹிந்துவா உணர்ந்து அமைச்சர் பண்ணின புனித காரியமாத்தான் இதை நான் பார்க்கிறேன்! புரியலையே...டேய் புருஷா... இப்போ, திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்துக்கு நேர் எதிர்ல ஈ.வெ.ரா., சிலையும், 'கடவுள் இல்லவே இல்லை'ங்கிற வாசகமும் ஏன் இருக்கணும்! 'கடவுள் இருக்குறதா தான் நம்புற இடத்துலதான் 'கடவுள் இல்லை'ன்னு சொல்லணும்'ங்கிறது நாத்திகத்தோட எண்ணம்; அதேமாதிரி, 'கடவுள் இல்லை'ன்னு நம்புற இடத்துலதான் 'கடவுள் இருக்குறார்'னு உணர்த்தணும்'னு ஆத்திகம் நினைச்சிருக்கலாம் இல்லையா? ம்ஹும்... நான் ஏத்துக்க மாட்டேன் பேபி; நீ என்கிட்டே ஹிந்தியை திணிக்கப் பார்க்குறே! ஏது... ஹிந்தியா... போடா... மாட்டுமூளை!