மிஸ்டர் மூளைக்காரன்
என்னய்யா இப்படி கேட்டுட்டே... வா... இப்படி உட்காரு; 'தலைவரு... தலைவரு...'ன்னு ஒருத்தர். அரசியல்ல இருந்த அவருகிட்டே நானும் எங்கக்காவும் ரொம்ப நாளா வேலை பார்த்துட்டு இருந்தோம். அவர்கிட்ட ஒருநாள்... 'கஷ்டப்படுறவங்களுக்கு உணவு பரிமாறிட்டு, அவங்க கை வைக்கிறதுக்கு முன்னாடி அவங்க தட்டுல இருந்து நீங்க எடுத்து சாப்பிட்டு அன்பை நிரூபிக்கிறீங்க; இதுக்கு பதிலா, அவங்க சாப்பிட்டுட்டு இருக்குறப்போ அந்த கையால தரச்சொல்லி வாங்கி சாப்பிட்டாத்தானே மக்கள் நம்புவாங்க; இல்லேன்னா, 'நடக்கிறது நாடகம்'னு நினைச்சிட மாட்டாங்களா தலைவரே' ன்னு எங்கக்கா பொசுக்குன்னு கேட்டுப்புட்டா! அய்யய்யோ...! ஆமாய்யா... தலைவரோட கண்ணு சிவந்து போச்சு; 'சட்டு'ன்னு யோசிச்ச நான் 'படக்'குன்னு குறுக்கால பூந்துட்டேன்ல! 'தலைவரே... சித்த வைத்திய பரம்பரையில வந்த 'அக்மார்க்' ஆத்திகர் ஆனந்தம்... ஞாபகம் இருக்கா; 'ஈனக்கடாரி'ங்கிற ஆட்டை வளர்த்து, சைவ ஆகமம் சொன்ன புல்லை மட்டுமே அதுக்கு திங்க கொடுத்து, அது போட்ட புழுக்கையில இருந்து விபூதி தயாரிச்சு பூசிக்கிட்ட 'பெரிய' மனுஷன்! 'அப்படியாப்பட்ட ஆத்திகர், ஒற்றைவாடை தியேட்டர் பெண்கள் மாநாட்டுல நாத்திகரான ஈ.வெ.ரா.,வுக்கு 'பெரியார்'ங்கிற பட்டம் கொடுக்கணுங்கிறார்; 'கொடுங்க; வாங்கிக்க என்ன கஷ்டம்'னு ஈ.வெ.ரா.,வும் ஏத்துக்குறார்! 'புரியுதா தலைவரே... முதல் புள்ளிதான் எந்த கோலத்துக்கும் ஆதாரம்; கொடுக்குறது நம்பும்படியா இருந்தாத்தான் ஏத்துக்கிட்டது காலத்துக்கும் நிற்கும்' னு விளக்கமாச் சொன்னேன்! அதுக்கு உன் தலைவரு என்ன சொன்னாரு? அவரு சிம்பிளா ஒண்ணு சொன்னாரு; 'எனக்கு கீழே இருக்குறவங்க சிந்திக்கிறதே எனக்குப் பிடிக்காது; இந்தா 1,000 ரூவா... மாசா மாசம் இப்படி தர்றேன்; நீங்க சிந்திக்கவே கூடாது'ன்னாரு! அதுக்கு நீ என்ன சொன்னே? பட் எனக்கு அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருந்துச்சு; ஒத்துக்கிட்டேன்! த்துா...! யோவ் வீரபாகு... கேவலமான உன் பேக்கரி கதையைத் தவிர வேற ஏதாவது கைவசம் இருக்கா?