வா வாசி யோசி...
நடிகர்களி ன் வா கன த்தை விரட்டிச் செல்லும் வெறித்தனமும், அரசியல் வாதிகளின் கருத்துக்களை அறிவுக் கண்ணை மூடிக்கொண்டு ஏற்கும் மடத்தனமும் இவர்களிடம் இல்லை! 'ஒருவரை பின்பற்ற அவர் எப்படி யானவராக இருக்க வேண்டும்' என்பதை நன்கு அறிந்திருக்கும் இவர்கள், மதுரை, அமெரிக்கன் கல்லுாரியில் பயிலும் மாணவ வைர ங்கள்! 'உழைப்பால் உயர்ந்தவர்கள் என நான் அறிந்து வைத்திருப்பவர்கள் பலர்; ஆனால், 'ரைஸ் மில்' தொழிலாளியாக 50 கிலோ அரிசி மூட்டையை சுமந்து என்னை ஆளாக்கிய என் அம்மா பஞ்சவர்ணத்தின் உழைப்பு, நான் அருகிருந்து பார்த்தது; குடும்பத்தின் சக்கரம், அச்சாணியாக இருக்கும் என் அன்னைக்கே எப்போதும் நான் ரசிகை!' - மு.காயத்ரி , பிஎச்.டி., 'அந்த அண்ணன் பெயர் பிரபுதேவ். மனைவி வேறு வாழ்க்கையை தேடிப்போய் விட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் சாலை விபத்தில் இறந்து விட்டார். அவருடைய சூழலுக்கு, வாழ்க்கை பற்றி எதிர்மறை கருத்தை எனக்குள்ளே துாவி இருக்கலாம். ஆனால், 'எல்லாவற்றையும்விட உன் வாழ்வை நேசி' எனச் சொன்னார். அவர்... என் குரு!' - மு.கோபாலகிருஷ்ணன், பி.ஏ., 'அன்று கல்லுாரி முதல் பருவத்தின் முதல் தேர்வு. சரியான சில்லரை இல்லாததால் பேருந்தில் இருந்து என்னை நடத்துனர் இறங்கச் சொன்னபோது, முன் பின் அறியாத மூக்கம்மாள் பாட்டி எனக்காக பயணச்சீட்டு வாங்கினார். 'கேட்கும் முன் செய்யும் உதவியே மகத்தானது' என எனக்கு வகுப்பெடுத்த அவரே என் வழிகாட்டி!' - ரா.ஹரிஷ்ராஜ், பி.ஏ.,