வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எழுபதுகளில், கருமை நிற முன்னணி நடிகர் யாரும் இல்லாதபோதும், தன்னுடைய கதை மீது முழு நம்பிக்கை வைத்திருந்த இயக்குனர் சிகரம், சிவாஜி ராவை , " ரஜினி காந்த் என்ற ஹீரோவை உருவாக்கியது கோடம்பாக்கத்திற்கே தெரிந்த செய்தி. ஆனால், சுய முயற்சியாலும் , தன்னம்பிக்கை மூலமாகவும், வெற்றி மேல் கொண்ட தணியாத தாகத்தினால், இன்றளவும் சினிமாவில் ரஜினி ஒரு வெற்றி குதிரை தான். என்ன ஆனால், மிக மிக சிலரே இந்த வெற்றி குதிரையை சரியாக செலுத்திருக்கிறார்கள். பாலசந்தர், மகேந்திரன், sp முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, ks ரவிக்குமார் போன்றோர் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளனர். மாஸ் படமாக இருந்தாலும், பேச வைக்கும் படமாக இருக்க வேண்டுமேயன்றி , பண பசை படமாக இருக்க கூடாதென்பது இளையவர் லோகேஷுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வன்முறையும் ஒரு வகை ஆபாசம் என்பது இன்னும் மூத்த நடிகர்களுக்கே தெரியவில்லையா அல்லது பணத்தின் மோகம் அறிவு கண்ணை மறைத்ததோ என தெரியவில்லை.