'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், உலகின் முதல் சி.என்.ஜி., பைக்கான 'ப்ரீடம்' பைக்கை அறிமுகப்படுத்தி வியக்க வைத்துள்ளது. இந்த பைக், டிஸ்க் எல்.இ.டி., டிரம் எல்.இ.டி., மற்றும் டிரம் என 3 வகையில் வருகிறது.சி.என்.ஜி., டேங்க், ஓட்டுனர் சீட்டிற்கு கீழ் சாமர்த்தியமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேங்கில், 2 கிலோ அளவிற்கு சி.என்.ஜி., எரிபொருளை நிரப்பலாம். பெட்ரோல் டேங்கில் 2 லிட்டர் பெட்ரோல் வரை நிரப்ப முடியும். 1 கிலோ, சி.என்.ஜி.,யில் 102 கி.மீ.,ரும், 1 லிட்டர் பெட்ரோலில் 65 கி.மீ.,ரும் மொத்தம், 334 கி.மீ., வரை இந்த பைக்கில் பயணிக்க முடியும் என பஜாஜ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.சீட்டின் உயரம் 825 எம்.எம்., ஆகவும், நீளம் 785 எம்.எம்., ஆகவும் இருக்கிறது. மேலும், முன்புற டெலிஸ்கோபிக் மற்றும் பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன்கள், எல்.சி.டி., டிஸ்ப்ளே மற்றும் 7 நிறங்களில் இந்த பைக் வருகிறது. மேலும், இந்த பைக்கில் 11 பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விலை - ரூ. 95,000 முதல் ரூ 1,10,000
விபரக்குறிப்பு
இன்ஜின் 125 சி.சி., சிங்கிள் சிலிண்டர்பவர் 9.5 எச்.பி.,டார்க் 9.7 என்.எம்.,எடை 149 கி.லோ.,மைலேஜ் சி.என்.ஜி., - 102 கி.மீ., பெட்ரோல் 65 கி.மீ.,