| ADDED : ஜூலை 24, 2024 10:59 AM
'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் 'கொரில்லா 450' என்ற புதிய ரோட்ஸ்டர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் மூன்று வகையிலும், ஐந்து நிறங்களிலும் வந்துள்ளது.ஹிமாலயன் 450 பைக்கில் இருக்கும் 'ஹெர்பா 450' என்று செல்லப்படும் 452 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜின் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பைக்கை தனித்துவப்படுத்த, இன்ஜின் மற்றும் கியரிங் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.இதன் சேசிஸ் சிறிய மாற்றங்களுடன் தென்படுகிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்குகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும், சிறிய 11 லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை வழங்கப்படுவதால், இதன் எடை 11 கி.லோ., வரை குறைந்து உள்ளது.ட்ரையம்ப் ஸ்பீடு 400, ஹோண்டா சி.பி.300.-ஆர்., மற்றும் ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிலென் ஆகிய பைக்குகள் கொரில்லா பைக்குடன் நேரடியாக மோதுகின்றன.விலை ரூ.2.39 - ரூ.2.54 லட்சம் டீலர்: Royal Enfield - Adyar : 72003 29667
விபரக் குறிப்பு
இன்ஜின் 452 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டுஹார்ஸ் பவர் 40 எச்.பி.,டார்க் 40 என்.எம்.,மைலேஜ் 29.5 கி.மீ.,