மேலும் செய்திகள்
ஒயிட் சிமென்ட் அடிக்காமல் பட்டி வைக்கலாமா?
13-Dec-2025
தற்போதைய நவீன கட்டுமானத்தில் மாற்றுக்கட்டமைப்பு அவசியமான ஒன்று; அதற்கேற்ப கட்டமைப்புகளையும், வடிவமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். இது குறித்து, கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்(கொசினா) முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:கட்டடங்களில் புதுமையான மாற்று கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு முறைகளை நடைமுறைப்படுத்துவது, காலத்தின் கட்டாயம். இது கட்டுமானத்துறையில், மிகப்பெரிய வளர்ச்சியாக கருதப்படுகிறது. மணல், செயற்கை மணல், ஜல்லி, செங்கற்கள், இயற்கை வளங்களிலிருந்து நேரடியாக எடுக்கப்படுகின்றன. சிமென்ட்டுக்கு உண்டான மூலப்பொருள் சுண்ணாம்புக்கல். இரும்பு கம்பிக்கு உண்டான தாது மூலப்பொருள், இயற்கையாகவே கிடைக்கிறது.கட்டடத்துக்கு தேவையான, தண்ணீர் மற்றும் மரங்கள் என ஒவ்வொரு பொருளும் இயற்கை வளத்திலிருந்து பெறப்படுகின்றன. இதை மாற்று வழியில் பெற வேண்டும். இயற்கை வளத்தை பாதுகாக்க, புதிய யுக்தியை கட்டடத்தில் கொண்டு வர வேண்டிய, சூழலில் நாம் இருக்கிறோம். எனவே தான், புதுப்பிக்கத்தக்க மாற்று பொருட்கள், கட்டுமானத்திற்கு அவசியமாகிறது.அதற்கான ஆய்வுகளை துரிதப்படுத்த வேண்டும். அப்படி கண்டறிந்ததுதான் பிளைஏஷ் கற்கள். இதே போல் மற்ற பொருட்களையும், கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் கட்டுமானத்துறை உள்ளது. அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
13-Dec-2025