உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் பணிகளுக்கு கட்டுப்பாடு வருமா? 

வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் பணிகளுக்கு கட்டுப்பாடு வருமா? 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக மனை வாங்கி அதில் வீடு கட்டும் போது அப்பகுதி சாலையைவிட, 2 அடி உயரத்தில் தான் வீட்டின் தரை மட்டம் அமைக்கப்படும். இத்தகைய பகுதிகளில், சாலையின் தரைமட்டம் கடந்த, 20 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வருவதால் வீட்டின் தரைமட்டத்தைவிட சாலை உயர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக புதிதாக சாலை அமைக்கும் போது அங்கு தரைமட்டத்தை உயர்த்தி அதன் மேல் தார் சாலை அமைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு தார் சாலை அமைக்கப்பட்ட பின், அடுத்து வரும் ஆண்டுகளில் புதுப்பித்தலின் போது, மேல் பகுதி தார் சாலை மில்லிங் முறையில் சுரண்டி எடுக்கப்பட்டு அதன் பின் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும்.ஆனால், பல இடங்களில் மில்லிங் பணிகள் மேற்கொள்ளாமல் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டதால், அதன் தரை மட்டம் படிப்படியாக உயர்ந்துவிட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் சாலையைவிட வீடு தாழ்வான பகுதியாக மாறியிருப்பதை பார்க்க முடிகிறது.இதனால், மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் வெள்ள நீர் நேரடியாக வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பழைய வீட்டை இடித்து கட்டுவோர் கூடுதல் உயரத்தில் தரைமட்டத்தை அமைப்பது வழக்கமாக மாறி உள்ளது.பழைய வீட்டை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் செயற்கை முறையில் வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் வழிமுறையை நாடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, பீஹார், ஹரியானா மாநிலங்களில் இருந்து சில குழுக்கள், ஹைட்ராலிக் கருவிகளை பயன்படுத்தி வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தி கொடுக்கின்றன.சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இக்குழுக்கள், வீடுகளின் தரைமட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபடுகின்றன. இதில் சாதாரணமாக, தரைதளம் மட்டும் உள்ள வீடுகள் மட்டுமின்றி, இரண்டு, மூன்று மாடி கட்டடங்களையும், 5 முதல், 10 அடி வரை உயரமாக்கி கொடுக்கின்றன.மழைக்கால பாதுகாப்புக்காக இந்த வழிமுறையை உரிமையாளர்கள் பயன்படுத்தினாலும். அரசு துறைகள் இது விஷயத்தில் எவ்வித வரைமுறைகள், கட்டுப்பாடுகளை விதிக்காமல் உள்ளது ஏன் என்று தெரியவில்லை. எந்தெந்த பகுதியில் எத்தனை அடி வரை வீட்டின் தரை மட்டத்தை உயர்த்தலாம்.தரைமட்டம் உயர்த்தப்பட்ட நிலையில் வீட்டின் ஸ்திரதன்மை எப்படி இருக்கும், தரைமட்டம் உயர்த்தும் பணியின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பது போன்ற விஷயங்களில் அரசு நிர்வாகம் தனக்குள்ள பொறுப்பை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.இப்போதாவது அரசு விழித்து இது விஷயத்தில் உரிய கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும். தரைமட்டம் உயர்த்தும் பணிகளுக்கான பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Govind Puramm
ஜூன் 14, 2024 15:52

ஐயா நீண்ட கால நோக்கில் எந்தவித அரசும் சாலை அமைக்கும் பணி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயத்தை செய்யவில்லை அவர்கள் ஆட்களுக்கு டெண்டர் அளித்து வாயை அடைத்து அரசியல் ஆதாயம் கண்டது ஆனால் ஒரு சாதாரண மனிதன் வீட்டை கட்டி நீரீல் சாதாரண மழைக்கே மிதக்கும் நிலைக்கு ஆளானார் வீடுகட்ட தற்போது எவளவு செலவாகும் அதைவிட வீட்டை கடன்வாங்கி சக்திக்கு தகுந்தவாறு உயர்ந்து பாதுகாக்கிறான் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்காத வேண்டும் என்றால் பழையபடி ரோட்டை போடாமல் காசு கமிஷன் வாங்கி மக்கள் கஷ்டம் கொடுத்தவர்கள் ஐ தேடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தவிர இவர்களுக்கு தடை போட வேண்டிய அவசியம் இல்லை


சுகு
ஜூன் 10, 2024 20:26

செய்தி போட்டவரை சரி. கூடவே அதனால் விலையப்பொகும் ஆபத்துக்கள் என்ன என்பதையும் வரிசைப்படுத்தி இருக்கலாம். பெரிய அளவிலான ஆபத்து எதுவும் இல்லை என்றால் தரை மட்ட அளவை உயர்த்திக் கொள்ளட்டும். யாருக்கு என்ன நஷ்டம்?


S Sivakumar
ஜூன் 10, 2024 18:48

இப்படி சாலை உயர்த்தியது யார்? அதற்காக நடவடிக்கைகள் அந்தந்த அதிகாரிகள் அதிரடியாக எடுக்காமல் ஏன் பொது மக்களின் பிரச்சினைக்கு வேற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருத்தப்பட வைக்கிறது.


Gopalan
ஜூன் 10, 2024 18:18

மேற்கத்திய நாடுகளில் சாலைகள், மழை வடிகால், கழிவுநீர் சாக்கடை முன்பே திட்டம் அமைத்து வீடுகளை கட்டுகிறார்கள். அந்த வீடுகள் நிரந்தர மாக விட்டு விடுகிறார்கள். சாலைகள் திட்டமிடுவது முன்பே செய்வதால் எந்த மாற்றமும் இருக்காது. புதுப்பிக்க சாலைகள் அதன் உயரத்தை மாற்றுவதில்ல. கழிவுநீர் குழாய்கள் அதன் மட்டத்தில் புதுப்பிக்க வைக்கிறார்கள்.


lana
ஜூன் 10, 2024 14:06

அதாவது கட்டிங் வசூல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை