ஆரோக்கியத்திற்கு 21 வழிகள்!
* காலையில், சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரியன் உதயமாகும் போது, துாக்கம் கலைந்து எழுவது* தினமும் வெறும் வயிற்றில், தேனில் ஊறிய இஞ்சி சாப்பிடுவது* துாங்கி எழுந்த இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவு சாப்பிடுவது* தினமும், 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது* மதிய உணவை, 12:00 - 1:00 மணிக்குள் சாப்பிடுவது* தினமும், 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது* பகலில் துாங்காமல் இருப்பது* இரண்டு வேளை மலம் கழிப்பது* முட்டை, பால், பால் பொருட்களை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது* அப்பளம், ஊறுகாய், இறால், காலிபிளவர், மைதா, கடலை மாவை முற்றிலும் தவிர்ப்பது* வெயில் காலத்தில் நல்லெண்ணெய், குளிர் காலத்தில் கடலை எண்ணெய் பயன்படுத்துவது* மாதம் இரண்டு அல்லது மூன்று முறை கீரை சாப்பிடுவது* வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது, மாதம் ஒரு முறை மலமிளக்கி மருந்து சாப்பிடுவது* இரவு உணவை, 7:30 - 8:00 மணிக்குள் சாப்பிடுவது* இரவு, 10:00 முதல் காலை, 6:00 மணி வரை துாங்குவது* இரவில் கண் விழிக்காமல் இருப்பது* மது, சிகரெட் பழக்கத்தை தவிர்ப்பது* இரு பாலினத்தவரும் தங்களின் உடற்கூறியல் பற்றிய அறிவை வளர்த்து, எதிர்பாலினத்தவரின் நலனில் அக்கறையுடன் இருப்பது* அந்தந்த பருவத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது* கண்டந்திப்பிலி, வேப்பம் பூ, ஓமம், வெந்தயம், சதகுப்பை, கசகசா, மிளகு, சீரகம், மஞ்சள், சோம்பு, தனியா, மாசிக்காய் போன்றவற்றை அவசியம் சமையலறையில் வைத்திருந்து, தேவையான போது அவசியம் பயன்படுத்த வேண்டும்.டாக்டர் மது கார்தீஸ்சித்த மருத்துவர், சென்னை. 99944 93687