உள்ளூர் செய்திகள்

முழங்கால் வலி நீக்கும் அஸ்வகந்தா!

மழை மற்றும் பனி காலத்தில், பலருக்கும் முழங்கால், கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டு, வலி கடுமையாக ஏற்படுவது உண்டு. அதுபோன்ற நிலைகளில் உடல் பலவீனத்தைப் போக்கி, நரம்புகளுக்கு பலனளிக்க அஸ்வ கந்தா லேகியம், அஸ்வகந்தாதி சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடலாம்.வலி, வீக்கம் உள்ள இடங்களில் லஹசராதி தைலம், பிண்ட தைலம், இதில் ஏதாவது ஒன்றை லேசாக தடவி, வலி உள்ள இடத்திற்கு ஓய்வு கொடுக்கும் விதமாக, துணியை சுற்றி வைக்கலாம்; வீக்கமும், வலியும் குறைந்து விடும். வலி, வீக்கம் அதிகம் இருந்தால், முருங்கை, புளி, எருக்கை, நொச்சி, ஆமணக்கு மற்றும் வேப்பிலையை நறுக்கி, தண்ணீரில் போட்டு காய்ச்சி ஒத்தடம் கொடுக்கலாம்.ஊமத்தை, ஆமணக்கு, நொச்சி இலைகளை நசுக்கி, நல்லெண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் விட்டு வேக வைத்து, மிதமான சூட்டில், வலி உள்ள இடத்தில் வைத்து, கட்டி விட்டால் வலி குறைந்து, வீக்கம் குறைந்து விடும்.முழங்காலை சுற்றியுள்ள மூட்டு சவ்வுகளில் நீர் கோர்த்து வீங்கி, முழங்காலை மடக்கி, நீட்ட முடியாமல் இருக்கும். இதற்கு சில சூரணமும், லேகியமும் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி, அவரவரின் உடல் தன்மைக்கு ஏற்ப, வடித்த கஞ்சி, புளித்த மோர், எலுமிச்சை சாறு, புளி கரைத்த நீரில் குழைத்து வெதுவெதுப்பாக வீக்கம் உள்ள இடத்தில் பத்து போட்டால், மூட்டு சவ்வுகளில் உள்ள நீர் வற்றி, வீக்கம் குறைந்து விடும் அப்படி குறையாத நிலையில், மருத்துவமனையில் தங்கி, சில மருந்துகளை சாப்பிடுவதால், பிரச்னை தீர்ந்து விடும். கீழே விழுந்து மூட்டுகளில் அடிபட்டால், விளையாடும் போது ஏற்படும் பிசகு, உயரத்தில் இருந்து குதிக்கும் போது ஏற்படும் அதிர்ச்சி யில், முட்டியின் உட்புறம் உள்ள தசை நார்களில் கிழிசல் ஏற்படலாம். இதை முற்றிலும் குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் மிக சிறந்த மருத்துவ சிகிச்சை உள்ளது. மருத்துவரின் மேற்பார்வையில் இதை செய்து கொள்ள வேண்டும்.டாக்டர் ரஞ்சனி சாய் ராம், ஆயுர்வேத மருத்துவர், சென்னைபோன்: 94456 95771


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !