உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: தவறான மூன்று அபிப்ராயங்கள்!

கார்போ ஹைட்ரேட் உடல் கொழுப்பை அதிகரிக்கும்!உடல் பருமனை அதிகரிப்பது, கார்போ ஹைட்ரேட் தான் என, கடந்த, 10 ஆண்டுகளாக, அதை வில்லனாக்கி விட்டோம். சோடா, சாக்லெட் மற்றும் பேஸ்டரி போன்றவற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள், நிச்சயம் உடல் பருமனை அதிகரிக்கும். அதே சமயம், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி, பருப்பு இவற்றில் இருக்கும் கார்போ ஹைட்ரேட், உடலுக்கு சக்தியை கொடுப்பவை. புரதம், சிறுநீரகங்களுக்கு கெடுதல்!சிறுநீரகக் கோளாறு இருப்பவர்களை, குறைந்த அளவு புரதம் சாப்பிடச் சொல்வது, சிறுநீரகங்களுக்கு அதிக வேலை தர வேண்டாம் என்பதால் தான்! ஆனால், அதிகப்படியான புரதம், சிறுநீரகங்களுக்கு எந்த கெடுதலும் செய்வதில்லை என, ஆராய்ச்சிகள் கூறுகின்றன.பால் நல்லதல்ல!பால் மற்றும் சீஸ், பனீர் போன்ற பால் பொருட்களில், அதிக அளவு கால்ஷியம் சத்து உள்ளது. தவிர, வைட்டமின், பி12 மற்றும் அரிதான என்சைம்கள், பாலில் உள்ளன. இவை, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தோலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.ருஜுதா திவாகர், நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்