உள்ளூர் செய்திகள்

மூட்டுவலி உள்ளவர்கள் யோகா செய்யலாமா

எனது வயது 42. மூன்று ஆண்டு களுக்கு முன் கீழே விழுந்ததில் கணுக்காலில் அடிபட்டது. இப்போது நான் கணுக்கால் வலி, வீக்கம் மற்றும் அசைவின்மையால் அவதிப்படுகிறேன். என்ன செய்வது?கணுக்காலின் எலும்பு முறிந்திருந்தால், பொதுவாக அதை துல்லியமாக சேர்த்து பிளேட் வைக்க வேண்டும். சரியாக செய்யாவிட்டால் கணுக்காலின் மூட்டு பாதிக்கப்படும். அவ்வாறு பாதிப்பு ஏற்படும் போது கணுக்கால் வலி மற்றும் அசைவின்மையும் ஏற்படும். நீங்கள் மருத்துவரை சந்தித்து எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளவும். மேலும் கணுக்கால் மூட்டில் பாதிப்பு இருந்தால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில், மூட்டு நுண்துளை சிகிச்சையிலேயே சரிசெய்ய முடியும்.ஐம்பத்து நான்கு வயதான எனக்கு ஓராண்டாக லேசான மூட்டுவலி உள்ளது. மூட்டுக்குரிய பயிற்சி முறைகள், நடைபயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறேன். மூட்டுவலியுள்ள நான் யோகா செய்யலாமா?மூட்டுவலி உள்ளவர்கள் யோகா செய்வதில் எந்தத் தடையும் இல்லை. நடைபயிற்சியும் மேற்கொள்ளலாம். குதிப்பது, வேகமாக ஓடுவது, அதிக விசைகள் மூட்டினில் செல்லும் விளையாட்டுக்களை தவிர்ப்பது நல்லதாகும். சுருக்கமாக சொன்னால், எந்த நடவடிக்கையை செய்யும்போது, மூட்டினில் வலி உண்டாகிறது என்றால், அதை செய்யாமல் இருப்பது நல்லது. இது 'லைப்ஸ்டைல் மாடிபிகேஷன்' என, கூறப்படுகிறது.என் வயது 22. பளுதுாக்கும் போட்டியில் ஆர்வம் உண்டு. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக, சில நாட்கள் முன் பயிற்சியின்போது, அதிக எடையுள்ள பளுவை துாக்கினேன். என் புஜத்தில் 'பைசெப்ஸ்' என்னும் தசை அறுந்துள்ளது. இதற்கு சிகிச்சை உண்டா? பளுதுாக்கும் போட்டியில் நான் பங்கேற்க இயலுமா?பைசெப்ஸ் என்னும் தசை பளுதுாக்குவதற்கு தேவைப்படும் மிகமுக்கியமான தசையாகும். அதன் தசைநார் அறுந்திருந்தால், அதை சீரமைக்க நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அவ்வாறு சீரமைத்தபின் முறையான பிசியோதெரபி பயிற்சிகள் மேற்கொண்டால், பைசெப்ஸ் தசையின் வலிமையை பளுதுாக்கும் போட்டியில் ஜெயிக்கும் அளவிற்கு கொண்டு வரமுடியும். மனம் தளர வேண்டாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளவும்.எனது வயது 64. சில வாரங்களாக தோள்பட்டை வலி உள்ளது. ஆறு மாதத்திற்கு முன் புற்றுநோயால் கர்ப்பப்பை அகற்றப்பட்டது. இதற்காக ஹீமோதெரபியும் மேற்கொண்டேன். தற்போது தோள்பட்டை ஹியூமரஸ் எலும்பில் புற்றுநோய் பரவி, முறிவும் ஏற்பட்டுள்ளது. எனக்கு சிகிச்சை உண்டா?ஹியூமரஸ் எலும்பில் புற்றுநோய் பரவி உள்ளது என்றால், அது நான்காம் நிலையில் (ஸ்டேஜ் 4) உள்ளது என, எடுத்துக் கொள்ள வேண்டும். முறிந்த ஹியூமரஸ் எலும்பினால் உள்ள வலியை போக்க, ஹியூமரஸில் ஒரு 'ராடு' போட வேண்டும். வலி குறையும். ஆனால், உங்கள் புற்றுநோயின் வீரியத்தை கட்டுப்படுத்தும், மேலும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் எலும்பு மூட்டு மருத்துவம் மற்றும் புற்றுநோய் நிபுணரை சந்தித்து உங்கள் பிரச்னையைக் கூறி சிகிச்சை மேற்கொள்ளவும்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !