தேங்காய் எண்ணெய் போதும்!
வைரஸ் காலத்தில், வழக்கத்தை விட, அதிக தடவை, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்; வைரஸ் தொற்றில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள, இதுதான் மிக அவசியம்.அதே சமயம், அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதால், கைகளில் வறட்சி ஏற்பட்டு, அரிப்பு, எரிச்சல், தோல் உரிவது, சில சமயங்களில், தோலில் வெட்டுக் காயம் போன்ற ஏற்படுவதாக பலர் சொல்கின்றனர். அதற்காக, கைகளை கழுவுவதை தவிர்க்க கூடாது.ஒவ்வொரு முறையும் கைகளை கழுவியதும், ஈரத்தை நன்கு துடைத்து தோலில் ஈரப்பதத்தை தரும் ஏதாவது, கிரீம் பயன்படுத்தலாம்.எல்லாவற்றையும் விட சிறந்த தீர்வு, தேங்காய் எண்ணெய். இரவு தூங்க போவதற்கு முன், கைகளில் தேங்காய் எண்ணெய் தடவி, பருத்தி துணியால் ஆன கையுறை அணிந்து கொள்ளலாம். காய்கறி, பழங்களை வெட்டும்போதும், சமையல் செய்யும் நேரத்திலும், இதை பின்பற்றலாம்.தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, பாதாம் எண்ணெயும் பயன்படுத்தலாம்.டாக்டர் தீபிகா லுனாவட், தோல் மருத்துவ ஆலோசகர்சென்னை