உள்ளூர் செய்திகள்

பாட்மின்டன் விளையாட முடியவில்லையே

பயிற்சி பெற்ற டாக்டரிடம், பரிசோதனை செய்து, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுங்கள். 'கிளனாய்டு லேப்ரம்' கிழிந்திருப்பது கண்டறியப்பட்டால், அதை சீரமைத்தால், வலி நீங்கும்நாற்பது வயதான நான், பாட்மின்டன் விளையாடுகையில், பந்தை அடிக்க கையை உயர்த்தினால், தோள்பட்டை இழுக்கிறது; தீவிரமான வலி ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன?இது, தோள்மூட்டில் உள்ள குருத்தெலும்பு, சீராக இயங்காததன் அறிகுறி. தோள்மூட்டின் கிண்ணம் பகுதியில் உள்ள, 'கிளனாய்டு லேப்ரம்' என்ற உறுப்பு கிழிந்து இருந்தால், பந்தை வீசும் வேகம் குறையும்; வலியும் ஏற்படும். நீங்கள் தோள்பட்டை மருத்துவத்தில், பயிற்சி பெற்ற டாக்டரிடம், பரிசோதனை செய்து, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுங்கள். 'கிளனாய்டு லேப்ரம்' கிழிந்திருப்பது கண்டறியப்பட்டால், அதை சீரமைத்தால், வலி நீங்கும்.என் வயது, 28. ஆறு ஆண்டுகளுக்கு முன், விபத்தில், கையில் உள்ள ரேடியஸ் மற்றும் உல்னா எலும்பு முறிந்தது. முட்டைப்பத்து சிகிச்சை எடுத்தேன். முறிந்த எலும்புகோணலாக இணைந்திருப்பதால், கையின் செயல்பாடு சீராக இல்லை. வடிவமும் சீர்குலைந்து கிடக்கிறது. இதற்கு சிகிச்சை உண்டா?ரேடியஸ் மற்றும் உல்னா எலும்பு முறிந்தால், அது, தானாக இணையும். இந்த சிகிச்சையின் நோக்கம், கோணல் இன்றி நேராக இணைய வைப்பது தான். விஞ்ஞான ரீதியற்ற முட்டைப்பத்து வைத்தியத்தில், அது உணரப்படவில்லை. இப்போது உங்கள் செயல்பாடு சீராக வேண்டும் எனில், எலும்பு மூட்டு டாக்டரை சந்தித்து, 'ஆஸ்டியோடாமி' என்ற சிகிச்சை செய்தால், வடிவம், செயல்பாடு சீராகும்; வலி குறையும். இருப்பினும், ஆரம்பத்தில் எடுக்கப்படும் சிகிச்சையை விட, தாமதமாக எடுக்கப்பட்டால், வெற்றி விகிதம் குறைவே.என், 88 வயது தாய், கீழே விழுந்ததில், இடுப்பு மூட்டில், 'நெக் ஆப் பேமர்' எலும்பு முறிந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், இவ்வாறு விழுந்ததில், முழங்கால் மூட்டின் மேல்பகுதியில் தொடை எலும்பு முறிந்து, 'பிளேட்' பொருத்தப்பட்டது. தற்போதைய முறிவுக்கு, ஆபரேஷன் செய்யலாமா?இடுப்பு மூட்டில், 'நெக் ஆப் பேமர்' எலும்பு முறிந்தால் அதற்கு அறுவை சிகிச்சை தேவை. இந்த எலும்பு முறிவின் தன்மையை பொறுத்து, அதற்கு, ஸ்குரூ அல்லது பகுதி இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்படும். தொடை எலும்பில், 'பிளேட்' இருந்தாலும் செய்ய முடியும். சில நேரங்களில், அந்த, 'பிளேட்'டை எடுத்துவிட்டுக் கூட செய்யலாம். எலும்பு மூட்டு டாக்டரை சந்தியுங்கள்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்