உள்ளூர் செய்திகள்

மறதி நோய்க்கு தேட வேண்டாம் மருந்து

கோவை: டிமென்ஷியா எனும் மறதிநோய் பற்றி சமூகத்தில் பல்வேறு வதந்திகள் உள்ளன, என்கிறார் இந்நோய் பற்றி சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், சிட்னி பல்கலை கவுரவ பேராசிரியர் ஆலன்வின்:டிமென்ஷியா பாதிப்பு வயதானவர்களுக்கே ஏற்படும் என்ற எண்ணம் நிலவுகிறது. சிறு வயதினருக்கும் இது ஏற்படலாம். மரபியல் காரணங்கள், வாழ்க்கை முறை முக்கிய காரணிகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மிதமான மூளை பயிற்சிகள் அவசியம். அதிகமான மன அழுத்தம் இந்நோயின் தாக்கத்தை வேகப்படுத்தும்.இந்தியாவில் 88 லட்சம் பேர் டிமென்ஷியா பாதிப்புடன் வாழ்கின்றனர். அவர்களை பராமரிக்க சரியான ஆட்கள், அமைப்புகள் குறைவாக இருப்பதே பெரிய சவால்.கிராமங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையால் முதியவர்களுக்கு ஆதரவு கிடைத்தது. நகரங்களில் தனியாக விடப்படும் பெற்றோர் அவதிப்படும் சூழல் தெரிகிறது.டிமென்ஷியா பாதிப்பால் ஒரே கேள்வியை, விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வது சகஜம். அதை சுட்டிக் காட்டி அவர்களை கண்டிப்பது, மன அழுத்தத்தை அதிகப்படுத்தும். அந்த நோயை இயல்பாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பராமரிப்பும் ஆதரவும் அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்