உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்!: மதுவால் வரும் மார்பக கேன்சர்!

பெண்கள் மது அருந்துவதால், மார்பக கேன்சர் வரும் என்பது, சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சர்வதேச அளவில், 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப் பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகின்றன. ஐரோப்பாவில், 'யூகே மில்லினியம் வுமன் ஸ்டடி' என்ற, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்ட, 28 ஆயிரம் பெண்களிடம் ஆராய்ச்சி செய்தனர். அதில், தொடர்ச்சியான மதுப் பழக்கத்தால் தான், இவர்களுக்கு மார்பக கேன்சர் வந்திருப்பதாக, அந்த ஆராய்ச்சி உறுதி செய்கிறது. தினமும், 10 கிராம் அளவு ஆல்கஹால் சாப்பிட்டாலே, மார்பக கேன்சர் வருவதற்கான வாய்ப்பு, 7 சதவீதம் உள்ளது; ஆனால், இந்த ஆராய்ச்சி, 12 சதவீதம் சாத்தியம் இருப்பதாக கூறுகிறது. ஆல்கஹாலில் உள்ள, 'அசட்டால்டிஹைடு' என்ற ரசாயனம், ஜீரண மண்டலத்திற்கு சென்று, ரத்தத்துடன் கலந்து, மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால், உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சும் தன்மையை இழக்கிறது. இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய், கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரி... இத்தனை நாட்களாக மதுப் பழக்கம் இருந்தது. நிறுத்தி விட்டால், வராது தானே என்றால், மதுவை நிறுத்தி, ஐந்து ஆண்டுகள் கழித்தே, பாதிப்புகள் குறையும். பழக்கத்தை விட்டு, 16 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும், 'ரிஸ்க்' அதிகமாகவே உள்ளது. 'சில வகை மதுபானங்கள், உடலுக்கு நல்லது' என்ற தவறான பிரசாரம் உள்ளது. மதுவில் எந்த வகை, எவ்வளவு குடிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்த அளவும், எல்லா வகையும் பாதிப்பை ஏற்படுத்தும்.டாக்டர் விதுபாலா,அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட், சென்னை. vidhubala@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்