இதய நோயைத் தடுக்கிறது பூண்டு!
ஆதிராஜன், மதுரை: பூண்டு சாப்பிட்டால், இதய நோய் வராமல் தடுக்கலாம் எனக் கூறப்படுவது உண்மையா?ஆம். உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பாதுகாப்பதில், பூண்டின் பணி மகத்தானது. இதன் மூலம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.