இரவு நேரச் சாப்பாடு உண்டா?
பாலமுருகன், மந்தவெளிப்பாக்கம், சென்னை: இரவு நேரங்களில், 8:00 மணிக்கு மேல், உணவு அருந்தக் கூடாது எனச் சொல்லப்படுவது ஏன்?படுக்கச் செல்லும்போது, மூளை சற்று ஓய்வு எடுக்கும் நிலை ஏற்படும். அப்போது, உடலியக்கங்கள் குறையும். ஜீரணத்துக்குத் தேவையான, சாறுகள் உடலில் சுரப்பதும் மந்தமாகவே இருக்கும். எனவே, ஜீரண சக்தியும் குறையும். இதனால், கொழுப்பு உடலில் சேர்ந்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.