நாங்க இப்படிதானுங்க!: பாட்டி சொன்ன பராமரிப்பு டிப்ஸ்!
என் முகத்தில் எனக்குப் பிடித்தது உதடுகள்; அதன்பின், தலைமுடி! வறட்சி இல்லாமல், பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என, மெனக்கெடுவேன். என் பாட்டி, அம்மாவிடம் கற்றுக் கொண்ட பராமரிப்பு, 'டிப்ஸ்'களையே பின்பற்றுகிறேன்.கொஞ்சம் உப்பு, காய்கறி சாறு, ரோஸ் வாட்டர் கலந்து, நானே தயார் செய்யும் ஸ்கிரப்பை, உதட்டில் தேய்த்துக் கழுவுவேன்; உதடுகள் பளிச்சென கவர்ச்சியாகி விடும். பாசிப்பயறு பவுடர், தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம் இவற்றை கலந்து, பேஸ்ட்டாக்கி, உடல் முழுவதும் தேய்த்து, ஈரம் உலர்ந்தவுடன் கழுவிப் பாருங்கள்; தோல் மின்னும். தயிர், தேன், முட்டை மூன்றையும் கலந்து, அரை மணி நேரம் ஊற வைத்து, தலையில் தேய்த்து, பேபி ஷாம்ப் போட்டு குளிப்பேன்.பிரியங்கா சோப்ரா பாலிவுட் நடிகை, மாடல்