நாங்க இப்படிதானுங்க!: காதலை அல்ல; பயத்தை சொன்னேன்!
மாடலிங், சினிமா தான் என் வாழ்க்கை என முடிவெடுத்தவுடன், மும்பை வந்து விட்டேன். பெற்றோரைப் பிரிந்து, பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்தேன். 13 வயதில் இருந்தே, ஆண் நண்பர்கள் இருந்திருக்கின்றனர். யாருடனும் நிலையாக தொடர்ந்து பழகியதில்லை. சில நாட்கள் சேர்ந்து வாழத் தோன்றும்; பல நேரம், தனியாக இருக்கவே பிடிக்கும்.இயல்பாக யாருடனும், பழக முடிந்ததில்லை. பல காதல் தோல்விகள். நடிகையான பின், இரண்டு முறை ஏற்பட்ட காதல் தோல்வி, என் இதயத்தை நொறுக்கியது. குறிப்பிட்ட நபருடன், 100 சதவீதம் நம்பிக்கையுடன் உறவில் இருக்கும் போது, உறவு முறிவது; மீண்டும் புது உறவு, மீண்டும் முறிவு என, ஒரு முறை அல்ல, பலமுறை நடந்ததால், வாழ்க்கை மீதான நம்பிக்கையே போனது.ரன்வீர் சிங்கை முதன் முறை சந்தித்தபோது, காதலை சொல்லவில்லை. என் பயத்தை, பாதுகாப்பின்மையைச் சொன்னேன். அவர், என்னைப் புரிந்து கொண்டார். திருமணத்திற்கு பின், மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்.தீபிகா படுகோனே பாலிவுட் நடிகை, மும்பை.