படர்தாமரையின் பின்னணி
* படர்தாமரைக்கு காரணம் என்ன. வராமல் தடுப்பது எப்படி?டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும்.இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும், கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் கூட பரவும்.சுயச் சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கும் படர்தாமரை பாதிக்கிற வாய்ப்பு அதிகம். படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியவற்றை சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.-டாக்டர் மதுமிதா (ஓமியோபதி)89392 66767