குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - பெண்களின் பொதுவான பிரச்னை!
மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலின்படி, என்னிடம் வந்த தம்பதி, உடல் பருமனுடன் இருந்தனர். இருவரும் இணைந்து, சுயமாக, மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்துகின்றனர். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.'பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' எனப்படும், கருக்குழாயில் வரும் நீர்க்கட்டிகளால், அந்தப் பெண் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காகவே, மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனைக்கு சென்றுள்ளனர். அவரின் அதிகப்படியான உடல் எடையைக் குறைக்காமல் பலன் இல்லை என்று என்னிடம் அனுப்பினார்.முப்பது ஆண்டுகளுக்கு முன், கருக்குழாயில் நீர்கட்டி என்பது அரிது; இன்று நிலைமை அப்படி இல்லை. பெண்கள் மத்தியில், மிவும் பொதுவான பிரச்னையாக, இது உள்ளது. உடல் பருமன் சார்ந்த பிரச்னை என்பதால், நீர்க்கட்டி கோளாறு இருக்கும் பெண்களில், 75 சதவீதம் பேர், உடல் பருமனுடன் இருப்பர்.நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு, உடலில் நிறைய ஹாரமோன் மாற்றங்கள் ஏற்படும்; மாதவிடாய் சீராக இருக்காது. பல மாதங்கள் தொடர்ந்து மாதவிடாய் வராது; சிலருக்கு, ஒழுங்கில்லாமல் இருக்கும். குழந்தையின்மைக்கு, இது முக்கிய காரணம்.உடல் பருமனைக் குறைத்தால் மட்டுமே, குழந்தை உண்டாவது சாத்தியம் என்று உறுதியானதும், இரைப்பையின் அளவை குறைக்கும், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்தேன்; அடுத்த ஆறு மாதங்களில், மாதவிடாய் சீராகி, குழந்தை உண்டானது. உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை செய்து, எடை குறைந்ததும், ஹார்மோன்களின் செயல்பாடு சீராகி, உடலின் உள் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.நீர்க்கட்டி பிரச்னை உள்ள அனைவருக்கும், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று சொல்ல முடியாது; உடல் பருமன் அதிகம் இருந்தால், அறுவை சிகிச்சை நல்ல பலன் தரும்.டாக்டர் பி.பிரவீன் ராஜ்,பேரியாட்ரிக் சர்ஜரி, கோவை.97909 66696